பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

411 கால்டுவெல்


உண்மையான வாரிசையும் அழைத்துச்சென்றமையால் அவ்வாரிசு திரு வாங்கூர் படைக்குப் புதிய வலிமையைப் புகட்டியது. காயன் குளத்துப் படையுடன் போரிட ஒரு சிறப்புப் படை தயாரிக்கப்பட்டது. செயலர் ராம ஐயன் போர்க்களத்திலிருந்த படைபோதுமான படைபலம் பெற்றாலன்றி காயன்குளப் படையை எதிர்த்து வெற்றியுடன் போராட இயலாதென்று, திருநெல்வேலிக்குச் சென்றார். பொன்னம் பாண்டியத் தேவர் தலைமை யில் ஒரு மறவர் படையையும், சில பாளையப்பட்டுக்காரரிடமிருந்து (பாளையக்காரர்), ஆயிரம் ஆயுதமணிந்த சிப்பாய்களையும் (mounted sipgs) பெற்று இப்புதிய துணைப்படையைக் கோட்டக்கரை வழியாக மலைப்பாதையில் நடத்திச் சென்றார்.

தளவாயும் தானாதிபதியுமடங்கிய உயர் அதிகாரிகளிடம் கலந் தாலோசித்த பிறகு, இராமஐயன் படையின் தலைமைப் பதவியை ஏற்றான். மறுநாள் நடந்த போரில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுப் புகழ்பெற்றார். காயன் குளம்படை முதல் தடவையாகப் போரில் தோல்வியுற்றது. ஆயினும் போர் தொடர்ந்தது. இராமாஐயனின் படை சிறுகச் சிறுக வெற்றி பெறத் தொடங்கி, ஒவ்வொரு நாளும் காயன்குளம் எல்லைக்குள் முன்னேறிக் கொண்டிருந்தது.

திருநெல்வேலியில் ஏற்பட்ட இணைப்புகள் (annexations).

மலையாளம் ஆண்டு 909 (கி.பி. 1734) இல் மகாராசா, திருநெல் வேலிப் பக்கத்திலுள்ள களக்காடு, கோர்க்குடி, வள்ளியூர் ஆகிய இடங்களும், திருவாங்கூரின் வடஎல்லையில் அமைந்துள்ள கோட்டாரக்கரை, பதனபுரம் முதலிய இடங்களையும் இணைத்தார். அந்த எல்லைகளுக்குப் பொறுப்பாயிருந்த வீர கேரளவர்மா மன்னன், திருவாங்கூர் மன்னருக்கு உறவினர். அவர் ஓர் இளவரசியை அரசுரிமை பெற வாரிசாக விட்டு மறைந்தார். மாநிலத்தின் நிர்வாகம், மிக்க தீவினைக்கஞ்சாத சர்வாதிகாரி காரியக்காரரால் நடத்தப்பட்டு வந்தது. நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. அந்த அமைச்சரை மகாராசா திருவனந்தபுரத்திற்கு வர வழைத்து, திறனற்ற நிர்வாகத்திற்குப் பல சான்றுகளை எடுத்துக்காட்டி, இழிவான நிலையில் நாட்டைவிட்டு விரட்டி விட்டார். நாட்டிற்கு உகந்த நல்ல பொறுப்புடைய தகுதிவாய்ந்த சர்வாதிகாரரை நியமித்தார். மகாராசா சிற்றரசைத் தானே ஏற்று இராணியை அழைத்து திருவனந்த புரத்திற்கு வந்து வாழ வேண்டுமென்றும் இல்லாவிடில் அவனுடைய சொந்த இடமான கொட்டாரக்கரையில் அவள் விருப்பப்படி தங்கியிருக்கலாமென்றும் கூறினார். ராணி இரண்டாவது வழியை விரும்பி நின்றனள். பக். - 129.