பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கூ.திராவிட மொழிகளின் மிகப் பழைய எழுத்துச் சான்றுகள்


மிகப் பழைய வடமொழிக் காவியங்களாகிய இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. ஆனால், அவை மிகச் சிலவே. அச்சிலவற்றைக் கருவியாகக்கொண்டு கி.பி. ஒன்பது அல்லது பத்தாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட திராவிட மொழிகளின் பண்டைய நிலைமையை ஆராய்ந்தறிய முடியாது. ஒன்பதாவது நூற்றாண்டிற்கு முற்பட்டதாக யாதொரு தமிழ் நூலும் எழுதப்பட்டிருக்கக்கூடும் என்று சொல்வதற்கில்லை*

உலகத்தில் எழுத்தானியன்ற பழைய நூல்களிடைக் காணப்பெறும் பண்டைய திராவிடச்சொல் மயிலின் பெயர்க்குரிய சொல்லாகும். கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்னாகவே தர்ஷிஷ், உவரி முதலிய இடங்களிலிருந்து மன்னன் சாலமனுடைய கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவரப்பட்ட வாணிபப்பொருள்களுள் மயிலிறகும் ஒன்றாகும் என்பது எபிரேய விவிலிய நூலிற் காணப்படும் சான்றாகும்.

இவ்விடத்தில் மயிலிறகு என்பதற்கு 'அரசர்' பகுதியில் 'துகி' என்ற சொல்லும், * வரலாற்று ’ப் பகுதியில் 'தூகி' என்ற சொல்லும் வருகின்றன. மலையாளக் கரையில் இப்பொருளில் இன்று வழங்கும் சொல் மயில் (தமிழ் -


  • இம்முடிபு தவறானதாகும். பிற்கால ஆராய்ச்சிகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் நூற்கள் இருந்தனவாக விளக்கியுள்ளன. 1. Tarshish. 2. Ophir. 3. Hebrew Text of the Books of Kings & Chronicles.