பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

யம் பகுதி. இது கொல்லம்முதல் தொடங்கி, கன்னியா குமரியை உள்ளடக்கி இருந்ததுடன் முத்துக்குளிக்கும் கொற்கைவரை எட்டியிருந்தது. திருவாங்கூருக்குப் புரளி என்றும், திருவாங்கூர் மன்னருக்குப் புரளீசர் என்ற பட்டம் இதனால் வழங்கப்படுகிறதென்றும், அப்பெயரால் முன் ஒரு கோட்டை இருந்ததென்றும் பேரறிஞர் குண்டெர்ட்டு கூறுகிறார். பரலிய என்பது கிரேக்கச் சொல்லாகவே இருத்தல் வேண்டும்.

(14) மேற்கூறப்பட்ட கரைய என்ற பெயர் சிறப்பாகக் குமரிக்கும் கொற்கைக்கும் இடைப்பட்ட இடத்திற்கு வழங்கியது. இது தமிழ் கரை என்ற சொல்லுடனும், கரையில் உறையும் கரையார் என்ற வகுப்பினர் பெயருடனும் தொடர்புடையது.

(15) கன்னியாகுமரிக்கும் காவேரிக்கும் இடையில் ஸோலேன் என்ற ஆற்றின் பெயரொன்று டாலிமியால் கூறப்படுகிறது. இதுவே கொற்கையின் தெற்கில் விழுவதாகவும் கூறப்படுகிறது. இது தாமிரபரணி ஆறாகவே இருக்க வேண்டும். இதன் தமிழ்ப்பெயர் பொருநை என்பது; வடமொழிப் பெயராகிய தாமிரபரணியின் பிற்பகுதிபோன் றொலிக்கிறது. கிரேக்க மொழியில் இதன் பெயர் எப்படி வந்ததென்று கூறமுடியவில்லை. அந்த மொழியில் இப்பெயர் சங்கு என்று பொருள்படுவதால், சங்கு அல்லது முத்துச் சிப்பிகள் எடுக்குமிடம் என்ற பொருளில் இப்பெயரை வழங்கியிருக்கலாம்.

(16) பேத்திகோ[1] என்பது பொதிகை.

(17) கொல்கை[2] என்பது கொற்கை. இன்றைய இலக்கியத் தமிழில் லகரம் றகரமாய்விடினும் முன் லகர மாகவே இருந்ததென்பதை இது காட்டுகிறது. பழைய கல்-


  1. Bettigo.
  2. Kolchiyi.