உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

' ஸூத்திரர் ' என்னுஞ் சொல்லின்-வழக்கும்

165

முடிபெறாத இளையவனான அருச்சுனனேயாயினும், அத்தகை யோன்கூட மணமானவுடன் மதுரையில் தங்காது தன் காட்டிற்கே சென்று விட்டமை காண்க! பண்டைத் திராவிட அாசர்களுக்குச் சமயத் தலைவராகவும், அமைச்சர்களாகவும் அமர்ந்த பார்ப்பனர்தாம் அதுகாறும் திராவிட அரசர்களுக்கு வழங்கிய ஆரிய அரசுரிமைப் பட்டங்கள், சின்னங்கள் முதலியவற்றையும், குலமுறையையும் அவர்களுக்கு நாளடைவில் நல்கினர் என்றும்; திராவிட அரசரும் மக்களும் அவற்றை நாளடைவில் உவந்து ஏற்றுக் கொண்டனர் என்றும் எளிதில் ஊகிக்கலாம். பிற்காலங்களில், கோண்டு வனத்திலும் இதே நிலை எய்தியமை காண்க! கோண்டர் களின் கலைவர்கள் ராஜா என்ற பட்டம் பெற்றதுடன் நாளடைவில் பூணூல் பெற்றுப் போர் வீரர்(க்ஷத்திரிய) மரபிற் சேர்க்கப்பட்டனர். தென்னாட்டிலும் முற்காலப் பாளையக்காார் இந்நிலையெய்தப் பெற்றனர்; இக்கால இராமநாதபுரம் புதுக்கோட்டை அரசர் போன்ற திராவிட அரசர்கள் ஆரியர் கூட்டுறவால் ஆரியராக்கப்பட்டு, படிப்படியாக அரசர் குலத்துள் சேர்க்கப்பட்டு அக்குலத்தார்க்குரிய தேவர், வர்மா முதலிய பட்டங்களையும் பெற்றிருக்க வேண்டும். பிற போர் வீர (க்ஷத்திரிய) மரபினரும் நாளடைவில் இதனை ஏற்றுக் கொண்டிருப்பர்.

மனு நூலாரும், பாரத ஆசிரியரும், புராண ஆசிரியர்களும் திராவிடக் குழுவைச் சேர்ந்த மக்கள் எல்லோரையுமே போர்வீரர் மரபில் சேர்த்து க்ஷத்திரியரென வகைப்படுத்திக் கூறுகின்றனர். ஆனால், திராவிடரிடையே வந்து குடியேறி அவர்களிடையே வடநாட்டு வகுப்புப் பிரிவினையையொட்டிச்


1. இதே கருத்தைப் பேராசிரியர் மாக்ஸ்மூலர் " பிரிட்டிஷ் அஸோ ஸியேஷனின் 1847-ஆம் ஆண்டறிக்கை "யில் வெளியிட்டுள்ளார்.