பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

ணும். பரந்து விரிந்த பனிக்கடல்! ஆகவே, கீழ்த் திசை நோக்கிக் செல்லவேண்டின் வரவரக் கீழ்நோக்கி இறங்கித் தான் செல்லல் வேண்டும். அதாவது, தமிழ்நாடு மேற்புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது என்பதே. ஆனால் மலையாள நாடோ இதற்கு நேர்மாறான அமைப்பை உடையதகாக இருக்கிறது. ஓங்கி யுயர்ந்த மலைத்தொடர் கிழக்கிலும், பரங்து விரிந்த பனிக்கடல் மேற்கிலுமாக ஆங்கு அமைந்துள்ளன. இவ்வாறிருந்தும், உயர்ந்த மலையமைந்துள்ள கீழ்த்திசையைக் குறிக்கும் சொல் மலையாளத்திலும் ”கிழக்கு” என்பதேதான்! மலையாளம் தமிழ்தான் என்று கூறுவதற்கு வேறு சான்றும் வேண்டுமோ? மலையாளம் பேசும் மக்கள் எல்லோரும் பண்டைத் தமிழர்களே யல்லரோ?[1] பாலைக்காடு, கோயமுத்தார் வழியாகப் பண்டைத் தமிழ்மக்கள் மேலைக் கடற்கரையை யடைந்து வடக்கே[2] சந்திரகிரி வரையிலும், தெற்கே திருவனந்தபுரத் தருகே யோடும் நெய்யாற்றுக் கரைவரையிலும் பரவி யிருத்தல் வேண்டும். அவ்விரண்டு எல்லைகட் கப்பாலும் அவர்கள் செல்லாமைக்குக் காரணம் இரு மருங்கிலும் தங்களினத்தைச் சேர்ந்த பிற வகுப்பினர் முன்னரே ஆங்குப் போந்து உறைதந் திருக்கக் கண்டமையேயாம். ”மலையாள அகராதி”'யின் முன்னுரையில் அதன் ஆசிரியரான டாக்டர் குண்டெர்ட் தமிழுக்கும் மலையாளத்திற்கும் பெருங் தொடர்புள்ள தென்பது உண்மையேயாயினும், முன்னதைப் பின்னதன் தாய்மொழியாகக் கொள்ளுதல் சரி யன்றென்று எழுதியுள்ளனர். ”கிழக்கு”, ”மேற்கு” என்ற சொற்களைக் கொண்டே மலையாள மக்கள் தமிழ்நாட்டிலிருந்து மேலைக் கடற்கரை போந்து குடியேறியவர்கள் என்று கொண்டுவிட லாகாது என்றும், ஆரியர்களைப் போலவே திராவிடர்களும் வடபா


  1. Palghat
  2. Chandragiri