திராவிட மொழிகள்—இராஜ்மஹால், ஒராவோன்
49
ஒவ்வாத முறையில் இவர்களை யடுத்து வாழும் தெலுங்கரே இவர்களைக் கொந்தர் என்றும் கோதர் என்றும் அழைக்கின்றனர்.
கழிந்த (1911) கணக்குப்படி இவர்களது தொகை ஐந்து நூறாயிரத்து முப்பதினாயிரம் (5,30,000) ஆகும்.
(V) இராஜ்மஹால் :
மாலர்கள் என்றும், இராஜ்மஹாலர் என்றும் இவர்கள் பெயர்பெறுவர். வங்காளக்கிலுள்ள இராஜ்மஹால் மலைகளில் இவர்கள் பண்டைக்காலத்திலிருந்து வாழ்ந்து வருபவர்கள். இராஜ்ஹால் என்பது பாறையர் அல்லது குன்ற மக்கள் என்று பொருள்படும். இம் மொழியின் அடிப்படை திராவிட இனக்தைச் சேர்ந்ததே என்பது “ஆசிய மொழியாராய்ச்சிகள்"[1] என்ற நூலின் ஐந்தாந் தொகுதியில் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள இராஜ்மஹால் மொழிச் சொற்கள் சிலவற்றிலிருந்தும், ஹாட்ஜ்ஸன் என்பார் எழுதிய “வங்காள மக்களின் வரலாறு"[2] என்னும் நூலிற் காணப்படும் சொற்பட்டியிலிருந்தும் நன்கு விளங்கும். சந்தாளர் என் போரின் மொழியோடு இதனைக் கலந்துவிடுதல் கூடாது. இம் மொழியின் இலக்கண அமைப்பைப்பற்றி ஒன்றுந் தெரிவதற்கில்லை. இம் மக்களின் தொகை ஏறக்குறைய 64,000.
(VI) ஓராவோன் :
சூடிய நாகபுரியிலும், அதைச் சுற்றிலும் வாழும் ஓராவோன் இனத்தாரின் தொகை 8,00,000. “வங்காள மக்களின் வரலாறு”[3] என்ற நூலில் கர்னல் டால்டன் இவர்களைப் பற்றிய சுவையான வரலாற்றுக் குறிப்பொன்று எழுதியுள்ளார். இவர்கள் மொழியும் திராவிட மொழியையே அடிப்படையாயுடையதாகும். பாட்ஸ்க் பாதிரியார்