பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திரிபுமொழிகள் அல்ல

59

முதன்மையான வேறுபாடுகள் கிடையா. அதற்குக்காரணம், வங்காளி முதலிய கெளரிய இனத்தைச் சேர்ந்த மொழிக ளெல்லாம் வடமொழிச் சிதைவுகளேயாயினும், அவற்றுள் வடமொழி யல்லாத சொற்களும், மரபுமொழிகளும் ஒரு சிலவே காணப்படுகின்றன என்பதே. அவற்றைப் போன்றவையே திராவிட மொழிகளுள் காணப்படும் வடமொழிச் சார்பற்ற சொற்களும், மரபு மொழிகளும் என்று அவர்கள் ஊகித்தமை இயல்பே. எனவே, வடமொழியிலிருந்துதான் திராவிட மொழிகள் தோன்றின என்று முடிவுகட்டிக் கொக்கரித்து வந்தார்கள் கோல்புருக், காரி, வில்கின்ஸ் முதலிய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் வடமொழி யாராய்ச்சியில் வல்லுநரேயாயினும் திராவிட மொழிகளைப் பற்றிய வரையில் மிகவுங் குறைந்த அறிவுடையவர்களென்றே, அவற்றைப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்களென்றேதான் கொள்ளல்வேண்டும். ஒப்பிலக்கணத்தின் உண்மைகளைத் தெரிந்த எவரும் திராவிட மொழிகளின் இலக்கண அமைதிகளையும், சொற்றொகுதிகளையும், வடமொழி இலக்கண அமைதிகளோடும், சொற்றொகுதிகளோடும் ஒப்பிட்டுப் பார்த்தபின், அவை எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றற் கொன்று உறவுடையன வென்றோ, வடமொழியிலிருந்துதான் திராவிட மொழி இலக்கண அமைப்பும், சொல்லாக்கத் திரிபுகளும் தோன்றியிருத்தல் வேண்டும் என்றோ கூற முன்வரமாட்டார் என்பது திண்ணம்.

திராவிட மொழிகளுக்கும் வடமொழிக்கு மட்டுமேயன்றி, அவ் விரண்டிற்கும் இந்து-ஐரோப்பிய[1] மொழிகளுக்குமே ஏதோ ஒருவகையான மூலத் தொடர்பு இருந்திருக்கவேண்டுமென்று கொள்வதோ, அக் கொள்கையே அடிப்படையாக, இந்து-ஐரோப்பிய மொழியினத்தில் திரா


  1. Indo-European