பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

யிட்டார்கள்; பின்னர் அதன் எஞ்சிய பகுதிகளையும் மொழிபெயர்க்கும் அவர்தம் முயற்சிக்கு உடனிருந்து பேருதவி புரிந்தவர் பன்மொழிவல்லுநராய கிரு. கே. அப்பாத்துரைப் பிள்ளையவர்கள், எம்.ஏ., எல்.டி., யாவர். இவர்களிருவருக்கும் எங்கள் நன்றி உரியதாகுக.

ஜி. ஏ. கிரீயர்ஸன் என்பார் எழுதியுள்ள “மொழியாராய்ச்சி” என்னும் ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சில குறிப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழாராய்ச்சியாளர்க்கும், தமிழ்ப்புலமைத் தேர்விற்குச் செல்லும் மாணவர்க்கும் பயனாகும்படி, இந்நூலின் பிற்சேர்க்கையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவை திரு. காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை அவர்கள் மொழிபெயர்த்துச் செந்தமிழ்ச் செல்வியின் வாயிலாக வெளியிட்டவையேயாம்.

இவ் வெளியீட்டினைத் தொடர்ந்து “ஒப்பிலக்கண ஆராய்ச்சி”யையும் மொழிபெயர்த்து வெளியிடக் கருதியுள்ளோம்; அக்கருத்தும் நிறைவேற எல்லாம்வல்ல முழுமுதற்கடவுள் அருள்புரிவானாக!

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்