பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை


அத்தகைய அரும்பெற லாராய்ச்சியைச் செய்து முடித்துத் தமிழ்மொழிக்கு ஏற்றம் அளித்த பெரியார் ரைட்ரெவரெண்டு ராபர்ட் கால்டுவெல், டி.டி., எல்.எல்.டி., ஆவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவி லிருந்து தமிழ்நாடு போந்து கிறித்து சமயக் தொண்டுடன் தமிழ்த் தொண்டும் புரிந்த ஐரோப்பியர்கள் பலருள்ளும் கால்டுவெல் ஐயர் தலைசிறந்தவராவர். அவர் இயற்றியளித்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஒப்பரிய ஆராய்ச்சி நூல் தமிழ்மொழிக்கு உலக மொழிகளிடையே வியக்கத் தக்கதோருயர் நிலையை யளித்தது; தமிழ்மொழி வளர்ச்சிக்குப் புத்துயிரளித்தது; தமிழ் மக்களின் பண்டைப் பெருமைக்கும், நாகரிகச் சிறப்பிற்கும், கலை வளத்திற்கும் என்றும் அழியாச் சான்று பகர்ந்தது; பகராநின்றுவருகின்றது.

சீர் சான்ற இந்நூல் ஆங்கிலத்தா னியன்றுள்ள காரணத்தால் அதனைத் தமிழ்மக்கள் பலரும் கற்றறிந்து நற்பயனெய்துதற்கில்லை. அதனைச் சிறந்த வகையில் மொழி பெயர்த்துப் பொதுவாக தமிழ்நாட்டிற்கும் சிறப்பாகத் தமிழ் மாணவர்க்கும் பயன்படுமாறு வெளியிடவேண்டுமென்று நெடுநாளாகக் கருதியிருந்தோம். அக் கருத்து இறைவனருளால் இப்பொழுது நிறைவேறத் தொடங்கினமைக்கு அவன்றிருவடிகளை இடையறாது வழுத்துகிறாம். “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” சிறந்ததொரு மொழியாாாய்ச்சிக் கருவூலம் என்றால், அதற்கு ஐயர் எழுதியுள்ள 118 பக்கங்கள் கொண்ட ஆங்கில முன்னுரை அக்கருவூலத்துக்கோர் அணிமுகப்பென்று கூறத்தகும். அம் முன்னுரையைச் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநரான தருமபுரம் ஆதீன வித்துவான் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளையவர்கள் பி.ஏ., தமிழில் மொழிபெயர்க்க முன்வந்து, சில பகுதிகளை எம் செந்தமிழ்ச் செல்வியின் வாயிலாக மொழிபெயர்த்து வெளி