பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


நோக்கினலும் உங்கள் ஆசைமுகமும். அன்பு விழிகளும். சிரிக்கும் உதடுகளும் தான் என் அகக் கண்களின் முன் தோன்றுகின்றன. அதனுல்தான் நாலும் இந்த உயிரைப் பிடித்துக் கொண்டு சாகாமல் இருக்கிறேன். .ெ பண் பரிபூரணமடைவது கணவனின் ஆதரவுப் பெருக்கிஇசி என்பதாக நீங்கள் எவ்வளவு முறை என்னிடமே சொல்லி யிருக்கிறீர்களே. கணவன் மனைவியரிடையே ஊடலும் பிணக்கும் ஏற்பட்டால் தான் வாழ்வு ரசனை பெறும் என்ற கொள்கை கொண்ட தாம்பத்தியக் கதைகள் பலவற்றை என்னிடம் கொடுத்துப் படிக்கச் செய்திருக்கின்றீர்களே...! அத்தான், எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா ? முன்பெல்லாம் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பட்டனத் திலிருந்து எனக்காக டாண் என்று ஓடிவந்து பூவை மாநகரில் குதித்து விடுவீர்களே. இப்போது வருஷம் ஒன்ருகப் போகிறதே...! எனக்கென துளி இடமாகிலும் அளியுங்கள். துளி இடம் இனியும் என்னைச் சோதிக்கா தீர்கள். பட்டதெல்லாம் போதும், நான் கணத்துக்குக் கணம் இறந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை தங்களது தேவ தரிசனம் இம்முறையாகிலும் கிடைக்கச் செய்வீர்க ளென்று நம்புகிறேன். சருகாகிவிட்ட என்னைத் தளிராக்கு வீர்களா? ...அத்தான்..! தங்கள் அடியாள், அபலை மீளு ’ சிதம்பரம் துளிர்த்திருந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டான். - என் சீரழிந்து போயிருந்த வாழ்வைச் செம்மைப் படுத்தியவர் ராமனதன். ஆனல் அதே ராமனதன் தன் னுடைய அபலை மனைவியின் இத்தனை கடிதங்களுக்கும் இரக்கங்காட்டினதாகத் தெரியவில்லையே. எனக்கு எத்தனை எத்தனை உரிமை மொழிகளைச் சொன்னர் என் பொருட்டு அவர் வடித்த கண்ணிர்தானே என் திரையிட்ட கண்களைத் திறந்து விட்டது. ஆனல் காலமெல்லாம் கண்ண்ர் வடித்துக்