பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


கதறிக் கொண்டிருக்கும் தன் அபலை மனைவி மீளுவின் வாழ்வுக்குப் புத்துயிர் அளிக்க உணர்வில்லையே. இதயமற்ற பாவி அவர் 1 ஆம்; அவரை இப்போதே கண்டு, எப்படியும் அவர் மனைவியை ஏற்றுத் திரும்ப ஆவன செய்ய வேண்டும். அப்புறம் தான் ஆபீசெல்லாம். அப்பப்பா, இத்தனை நாட் களாக இந்த ரகசியத்தை மூடி மறைத்து விட்டாரே ...' என்று வீறுடன் மொழிந்த சிதம்பரம் மேலே தொடர்ந்து பேசத் தொடங்கின சமயத்தில், அவன் கையில் உறையிட்ட கடிதமொன்றைத் தபால்காரன் கொணர்ந்து நீட்டிச் சென்ருன்.

  • அன்புள்ள நண்பர் சிதம்பரத்திற்கு '

இந்தக் கடிதம் உங்களை-நம் நண்பர்களைக் கட்டாயம் வியப்பிற்குள்ளாக்கு மென்பதை நான் அறிவேன். என்னை விசித்திரப் பிறவி என்றும் விடுவிக்கப்பட முடியாத, புரியாத புதிர் என்றும் கூடத் துற்றுவீர்கள். ‘.. . அன்று நான் தங்களிடம் நீங்கள் உங்கள் மனைவியைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டுமென்று எவ்வளவோ மன்ருடிக் கடைசியாக வெற்றியும் பெற்றேன். ஆனல் அதே சமயம் என் உள்ளம் எரிமலையாக, சூருவளியாக மாறியதை யாரும் அறிந்திருக்க முடியாது. நான் என் மனைவியைக் கடந்த சில மாதங்களாக விலக்கி வைத் திருந்த புதிரை யாரும் அறிய மாட்டார்கள். அவள் செய்த சிறு பிழை என்னுள் இமாலயப் பிழையாகத் தோன்றியது ; நான் பேயாகிப் போனேன். அவளே ஒதுக்கினேன். எங்களிடைப் பெரும் பிளவு சுவரெழுப்பி நின்றது. அவளே-அவள் பெய ரைக்கூட எண்ணிப் பார்க்க.என் நெஞ்சம் சம்மதம் சொல்ல மறுத்து விட்டது. மனத்தின் புதிருக்கு உவமையே கிடை யாதோ? ஆகையால் தானே நானே ஓர் புதிராகிப் போது நேர்ந்தது. என் மனைவியை அபலையாக்கிய அந்தரங்கத்தை என் மனதிலேயே புதை பொருளாக்கி விட்டேன். என் வினையா? அவள் வினையா? அவ்வப்பொழுது நீங்களெல்லாம் என் மனைவியைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு ஏதேதோ