பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


பொய் சொல்லி தப்பித்து விட்டேன். அவள் செய்த ஒர் சிறு தவறு என்னுள் அப்போது பேயாகச் சுற்றி இதுவரை எப் படியோ என் வைராக்கிய வெறியைக் கெட்டிப்படுத்தி விட்டது. அவள் உயிரைப் பணயம் வைத்து எழுதிய கண்ணிர்க் கடிதங்கள் அத்தனையும்கூட என்னே மனித இதயம் கொண்டவனுக்க-மனிதப் பண்பு கொண்டவனுக்க வழி விட வில்லை. ஆனல் அன்று தாங்கள் தங்கள் துணைவி செய்த சிறு குற்றத்தை மன்னித்துவிட வேண்டுமென்றும் தங்கள் மனைவி ரேனுகாவை நீங்கள் மீண்டும் ஏற்றுப் புதுவாழ்வு தொடங்க வேண்டுமென்றும் உங்கள் மனைவியின் சார்பில் நான் கூறிய வாதங்கள் இதோ என் கண்களேத் திறந்து விட்டன. ! என்னை அவை மனித மனம் படைத்தவகை ஆக்கி விட்டன : மனிதனுகி விட்டேன் ! - நான் அன்று உங்களிடம் உங்கள் இல்லாளின் பக்கம் வாதமிட்டு வடித்த அதே கண்ணிர் உங்கள் மனதை வெற்றி வழிக்கு மாற்றியது போல, அதே என் கண்ணிர் இந்த கடினத் தில் என் மனைவியின் தரப்பில் தர்க்கம் செய்து என் மனச் சாட்சியை வெற்றி கொண்டு, என்னேயும் என்பிரிய மீளுவுக் குரியவனுக்கி விட்டது . மரத்துப் போய்க் கிடந்த என் தார் மீக உணர்ச்சியும், அசட்டுக் கெளரவத்தினுலும் ஆத்திரத் திலுைம் அஸ்தமித் து விட்டிருந்த மனிதத் தன்மையும் அந்த சந்தர்ப்ப வேகத்தில் நான் பேசிய பேச்சினல் உதயமாகி என் வாழ்வையே ஒளி பெறச் செய்து, என் இதயத்தின் குரல் என்னைத் திருத்தி விட்டது. விந்தைதான் அதுவே எங்கள் எதிர்கால வாழ்வுக்குரிய புது வளத்திற்கும் வனப்பிற்கும் ஆசி கூவட்டும். இனி என் மீன பசுந்தளிர் இதோ, இர வோடு இரவாக இந்தோ சிலோன் எக்ஸ்பிரளில் புறப்படு கிறேன். புனர் வாழ்வு பெற்ற மீனவுடன் புது வாழ்வு பெற்ற நான் புத்தம் புதிய உலகிலே புதுயுகம் தொடங்க அங்கு ஓடி வருகின்றேன் ! மறந்து விட்டேன், பார்த்தீர்களா ? வரும்போது என் மீ.ை தங்கள் அன்பு ரேணுகாவையும் கையுடன் கையாகக்