பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1sol கைகோர்த்துக் கொண்டு தங்கள் முன் சமர்ப்பித்து விடப் போகிருளாம் நண்பர் தியாகுவின் மணவிழா என்றும் நம் இருவர் நினைவுகளிலும் பசுத்துளிராகக் காட்சியளிக்கும். ஆம் ; அது தானே நம் இருவரது விசித்திர மனங்களையும் மாற்றி யமைத்து சருகாகிப் பட்டுப்போன நம் இருவரது மனைவி யரையும் தளிராக்கிவிட ஏதுவாக அமைந்தது : தங்கள் அன்பன், ராமனுதன் ' ராமனுதன் இப்போதுதான் மனிதனுகி யிருக்கிருர் ; மீனு பாக்கியவதி !’ என்ருன் சிதம்பரம் புதுப் பூரிப்புடன். பக்கத்துத் தெருக் கல்யாண வைபவத்தில் நாதஸ்வரக் காரன் பொழிந்து கொண்டிருந்த ஆனந்த பைரவியின் இன்பப் பண் காற்றில் தவழ்ந்து நண்பர்களிடையே அமுதச் சூழ்நிலையைப் பரிமளிக்கச் செய்து கொண்டிருந்தது.