பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e e கன்னிப் பவளம் 'சபாசு I: அப்பொழுதுதான் பவளக்கொடிக்கு நல்ல மூச்சுத் திரும்பியிருக்க வேண்டும் -வாயெல்லாம் பல்; பல்லெல் லாம் பூஞ்சிரிப்பு ; சிரிப்பெல்லாம் சுகந்தம். ஈரம் மிக்க, தர்ம நியாயமான, நாணயம் மிகுந்த நாணம் :- நாளு முச் சூடும் சும்மா நொடிக்கு நூறுவாட்டி தொணதொணத்துக் கிணு இருந்த ஆத்தா இனிமேரெண்டு மூணு நாளைக்காச்சும் மூச்சுக்காட்டாதாக்கும். ஆத்தா இல்லாங்காட்டி, சமைஞ்ச குட்டி எனக்கு எங்கழுத்திலேயும் ஊரு உலகத்தைப் போலே மூணு முடிச்சு விழுகிற மட்டும், யாரு எனக்கு நாதியாம்? ம்...ஆத்தா நல்லா எழுதிக் கிடக்கவேணும்...ஆளு, ஆத்தாக் காரி முணுமுணுப்புக் காட்டாமல் இருந்தாக்க, அதுவே புண்ணியந்தானே! ஊம் !... அந்தப் புன்னகையில் தான் எத்தனை சத்தியக் கனவுகள்...சத்திய தருமங்கள் ! அந்தி மாலையின் மணம் பொன்வண்ணக் கதிர்களிலே பரவத் தொடங்கி விட்டது.