பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


செங்கோடனுக்கு வாய் கொள்ளாமல் சிரிப்பு வழிந்தது. "எஞ்சாமியோ இண்ணிய நாள் வரையிலே நான் பட்டினி கிடந்தாலும், உன்னை ஒரு வேளையாச்சும் காயப் போட்டிரு' கேன ? நீ நல்லவனுக்கு நல்லவன் ; பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். அந்தத் துப்பு விளங்காதா எனக்கு ? சரி, சரி. உன்னுேட பசிப்பாடு முந்து போச்சு. இனி என் பசிக்கு வகை சொல்லனுமில்லே ? என்ன, நாயந்தானே, சாமி ?’ என்று சிரிப்பும் களிப்புமாகச் செல்லமாய்க்,கேட்டுக் கொண்டே குடிசையை அணைத்து நின்ற ஆலமரத் துரடிக்கு மறுகினன் அவன். கொம்பேறி மூக்களுக இருந்தவன் இப்படித் தண்ணிர்ப் பாம்பாட்டம் ஆகி விடுவான ? நிலவில் பால் பொங்குகிறது. அடுப்பில் உலே பொங்குகிறது. செங்கோடனின் கண்கள் கொப்புளித்தன. அடுப்பில் சுள்ளியைத் தள்ளிவிட்ட போது, நெருப்புச் சுட்டு விட்டது. துடித்தான். அஞ்சலைத் தங்கம் என்னைச் சோதிக்காம இருந்திருந்தாக்க, எனக்கு ஏதுக்கு இம்மாங் கொத்த இடு சாமச் சோதிப்பெல்லாம் வருது ?’ ஊன் உருகியது. நல்லது 'தன் போக்கில் இரை தேடிக் கொண்டிருந்தது. அஞ்சலை !...” . . . . . செங்கோடன் தவித்தான். இதே மாதிரியான நிலா மலர்ந்த ஒரு நல்ல பொழுதில் தானே காட்டேரிக் காட்டுப்பத்தையில் அவன் அஞ்சலையைச் சந்தித்து, போட்டி போட்டுக் கொண்டு இந்த நல்ல பாம்பை மகுடி ஊதிப் பிடிக்க முயன்று, கடைசியில் பாம்பை நஞ்சு கட்டிக் கைலாகு கொடுத்துச் சாதுர்யமாகவும் சமர்த்தாக வும் பிடித்து வென்று, அதே மூச்சிலேயே அஞ்சலேயையும், வென்று ஆட்கொண்ட அந்த நல்ல பொழுதை அவல்ை எங்ங்ணம் மறக்க இயலும் ? அள்ளிச் செருகிய செவ்வந்திப்பூக் கொண்டையும் அள்ளிச் செருகாத அன்புப் புன் சிரிப்புமாகப் பொலிந்த