பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


புண்ணிய பூமியின் பயங்கர அமைதி. செங்கோடன் அடித்துப் போட்ட பாங்கில் சுரணை தப்பிய தூக்கத்தில் அமிழ்ந்து கிடந்தான். தலைமாட்டில் பாம்புப் பெட்டி. தொலைவிலே சேரி நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது. காலடி அரவம் அரவமாகப் பதுங்கி நெளிந்த துப்பு பாவம், செங்கோடனுக்கு எப்படித் தெரியக் கூடும். - ஆனல்- ஐயையோ, ஆத்தாடியோ !” - வாண் முட்டிப் பிளந்த அபய ஒலம் காற்றில் அலைந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் செங்கோடன். ஒலையைப் பிராண்டிப் பாய்ந்த மங்கிய ஒளியில் அவன் கண்ட காட்சி... கிழவன் முனியன் கையில் பற்றியிருந்த நஞ்சு இறக்கும் மூலிகை நாகதளிப்புடன் நீலம்பாய்ந்து நுரை தள்ளிப் பினமாகக் கிடந்தான். தலைமாட்டில் நல்லபாம்பு : ... செங்கோடனின் மனிதத் தன்மை விம்மிற்று. பாவிக் கிழம் ! என் பாம்பைப் பொட்டியோட லாந்திக்கிட்டு ஒடி, இதை வச்சுக்கிட்டுப் பிழைக்க நினைச்சிருக்கான். துப்புப் புரிஞ்ச நல்லது , அவன் கையிலே ருந்து விடுதலை வாங்கிக் கிட்டு, அவனுக்கும் விடுதலை கொடுத்திருச்சுது !...அடபாவி ! ஒன் தலைவிதி இந்தச் சூதுக்கா காவு ஆகவேனும் நல்ல பாம்பு இப்போது பெட்டிப்பாம்பு ! வெள்ளி முளைத்தது. செங்கோடனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. விளுப் போன பழிக்கு என்னை ஆளாக்கிப்பூடுமோ விதி '..தவித் தான். பாம்போடு விடிவதற்குள் குடிசையை விட்டு வெளியேறிவிடவேண்டுமென்று முடிவுக்கு வந்த நேரத்தில், அவன் மனச்சாட்சி சம்மதம் கொடுக்க மறுத்தது. நான் என்ன தப்புத்தண்டா செஞ்சேனம்?-அவன் இன்னது செய்வதென்று மட்டுப் படாமல் உழன்று கொண்டிருந்தான். 16. -