பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


அந் நேரத்தில் ராசாத்தி அலறிப் புடைத்துக் கொண்டு ஒடி வந்தாள். அடபாவி ! நீயும் உன் பாளத்த பாம்பும் கூட்டுக் கூடிச் சதி பண்ணி என் அப்பன் உசிரைக் குடிச்சுப் புட்டீங்களே ? ' என்று குற்றம் சுமத்தினுள். செங்கோடன் நிதானமாகப் பேசினன் .

  • இந்தாப்பாரு புள்ளே ! அளுவசியமிாய்ப் பழி சுமத்தினே, அது சங்கிலிக் கறுப்பருக்கு அடுக்காது. ஆத்தா பாதம் பெரியவளுக்கும் பொறுக்காது ! உன் அப்பன் என் னென்னமோ தில்லு மல்லு-தகிடுதத்தம் செஞ்சும், மாயம் பண்ணியும் என்னேட சாமியை எங்கிட்டேயிருந்து பறிச்சுக் கிட எத்தனிச்சான். ஆளு; அது பலிக்கலே கடைசியிலே என்னேட பாம்பைக் களவாட நினைச்சிருக்கான் போலே, பாம்பு-நல்லபாம்பு பாடம் படிச்சுக் கொடுத்திருச்சு குற்றம் செஞ்சா, அதுக்கு உண்டான தண்டனையை அனுபவிக்காமலா தப்ப ஏலும் ! இந்தப் பாடம் ஒனக்கும் கை கொடுக்கும், ராசாத்தி ! தப்பு எங்க பேரிலே இருந்தாத் தானே. நாங்க பயப்படவேணும் ...உன் அப்பன ஏந்திக்கிட்டு முதலிலே கிளம்பு, ராசாத்தி: ' என்ருன்.

பிணம் மறைந்தது. பாவம் !...” 字 滚、 米 இருள் கனத்துக் கிடந்தது. செங்கோடன் சுயப்பிரக்சினை இழந்து, செத்தசவம் போலே ஓலைக் கிழிசலில் கிடந்தான். விஷக் காய்ச்சல் என்ருல், சாமான்யம் அல்லவே ! மனம் கொண்டவன் மருந்து கொடுத்தான், உடை கஞ்சியும் கொடுத்தான். ஆந்தையின் அலறல் கேட்டுத்தான் செங்கோடன் உசும்பிக் கொண்டிருப்பானே? அவன் பார்வை எடுத்த எடுப்பிலே பாம்புப் பெட்டியை நாடி ஓடியது. மறுகணம் பதைத்துத் துடித்துத் தவித்தான். ஐய்ையோ! எஞ்சாமி