பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


நெஞ்சுருக்க கதறி வேண்டிக் கையெடுத்துக் கும்பிட்டான் செங்கோடப்பிடாரன். ஆனல்...அந்த நல்ல்பாம்பு ஊகூம் என்ற பாவனையில் தலையை உலுக்கியது. சாமியே என்ைேட கண்ணுக்குக் கண்ணுண் என் சாமியே! உன்னை நான் எப்பிறப்புக்குமே மறக்கவே மாட டேன் சாமி , ' செங்கோடனின் கண்கள் மூடிக் கொண்டன. மறு இமைப்பில் : } சிதறிக் கிடந்த மகுடியின் மீதமர்ந்த அந்த நல்லபாம்பு ஒருகணம் வெகு அற்புதமாகப் படம் எடுத்து, படம் விரித் து ஆடியது ; விளையாடியது. செங்கோடன் மகுடி ஊதி இசைக்கும் புன்னகவராளியின் இசை அதன் செவிகளிலே இழைந்திருக்க வேண்டும் ! விளையாட்டு மு டி ந்த து. செங்கோடனைச் சுற்றி வலம் வந்தது. பிறகு செங்கோடனின் காலடியைத் தஞ்சமடைந்த அந்த நல்ல பாம்பு மீண்டும் படம் எடுத்தது ; படம் விரித்தது படம் விரித்த தலையை மண்ணில் அடைக்கலம் வைத்து ஓங் காரமாகவும் ஒய்யாரமாகவும் மூன்று தடவை அடித்தது அடித்துக் கொண்டது. சத்தியத்தின் ஒலியாகவும் தருமத் தின் குரலாகவும் சப்த அலைகள் மிதந்தனவோ ? மறுகணம்? பொங்கிப் பீறிட்ட ரத்த வெள்ளத்தின் நடுவே மண்ணி டைத்தலை சாய்ந்துவிட்டது. அந்த நாதப் பாம்பு. விடிகிறது !... - சத்தியத்தின் தர்மமாகவும் தர்மத்தின் சத்தியமாகவும் அமரப் புன்னகையோடு தேவதரிசனம் தந்து கொண்டிருக் கிறது. அந்த நல்ல பாம்பு .