பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e தம்பி உடையான் ராஜாத்தியை உள் வாசலில் இருத்தி வைத்துவிட்டு வெளி வாசலுக்கு வந்தாள் பூங்காவனம். கடலைக் கொடிப் பட்டறை மீதிருந்த சிவசாமியை ஒரக்கண்ணுல் அளந்த வண்ணம், கவ்வல் கம்பினல் எஞ்சிக் கிடந்த கடலேக் கொடிகளைச் சுருட்டி மடக்கி துர்க்கி வீசினுள் அவள். பழகிப் போன குறிப்புக்கு இரு தரப்பிலுமேதான் வெற்றி, அவளைப் போலவே, அவனும் வேர்வைக்கு அணை கோலினன். பாளத்த வெய்யில் ஆளை வறுத்து எடுத்துப்பிடும் போலே ' ஆமா, மச்சான். நீங்க சொல்றது. மெய்தானுங்க ! ? பூங்காவனம் சொல்லி வாயை மூடவில்லை. கோடை வெயில் குணம் மாறியது. மழை கண் திறந்தது. அதே சமயத்திலே, ராஜாத்தியின் சிணுங்கல் அழுகையும் கண் திறந்தது. கோடை மழை நினைத்தால் பொழியும் ; குழந் தையின் கண்ணீர் மழைக்குழ்க்ட நேரம் காலம் கிடையாது தானே ? கிவசாமி பட்டறையினின்றும் தரையில் குதித்தான். பூங்காவனம் ஓடிப்போய் மகளை எடுத்துக் கொண்டாள்.