பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


' ம் ! ...உங்க அண்ணுச்சி, மாமா! ' என்று அழுத்தம் வீசிப் பேசினுள் சுட்டிப்பெண் சிவசாமியின் பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசின. அண்ணுச்சி ! -மறுகணம், கையிலிருந்த மிட்டாய்களைத் துார வீசியெறிந்தான் அவன். ஏலே, இனிமே அங்கணே. போனே, அப்பவே உன்னை முறிச்சுப் போட்டுப் பிடுவேன். ஆண் குஞ்சு சாமி பிடிச்சுப் போடலைன்னு நெனேச்சுக்கிடு ருேம் ! ' என்று அபாய அறிவிப்பைக் காட்டி, கைகளையும் ஓங்கிளுன் தந்தை. குழந்தை மனம் விம்மியது ! 粥 華 举 is தம்பியுடையான் படைக்கு அஞ்சான் ! என்பது வரலாறும் காப்பியமும் வடித்துக் கொடுத்த உண்மை. குப்புலிங்கம் சேர்வைக்கு இரு கண்கள்போல, பெரிய சாமியும் சிவசாமியும் அமைந்தார்கள். சிவசாமி தம்பி ; பெரியசாமி மூத்தவன். பிஞ்சு உள்ளங்களுக் கெல்லாம் அவர்கள் இருவரும்தான் தலைக் கட்டு கொண்டவர்கள் ; கார்வார் போன்ற உரிமைக்கும் பாத் தியம் பூண்டார்கள். ஒருநாள், ! உப்புக்கோடு மறித்து விளையாடினர்கள். தண்ணீர் பாய்ச்சி முடிந்ததும், கரையில் காக்கும் பொறுப்பு பெரியசாமியின் தலையில் விழுந்தது. அந்த விளை யாட்டில் முறைமையில் இன்ைெருவன் தப்புச் செய்தான். உடன் பிறந்தானே எதிர்த்த பொடியன்கள் எழுவரையும் எதிர்த்தான் தம்பி சிவசாமி எங்க அண்ணுச்சியை இந்த ஊர்க்காட்டிலே ஒருத்தின் கை நீட்டித் தொட்வா ?...' என்று வீறு பேசி, தமையனைக் காத்து வெற்றியும் பெற்ருன். சிவசாமி சின்னவன் தானே? அவனுக்கு ஒரு திருப்பம் அம்மை கண்டது. குய்யோ முறையோ வென்று, வெளி, வாசலில் செருகப்பட்டிருந்த வேப்பிலக் கொத்தைப் பார்த்து அழுதான் பெரியசாமி. உடன் பிறப்பு இல்லையெனில், அவ், வுடம்பு பாழ் என்ற மூதுரைக்குப் பொழிப்புரையாக அமைந்.