பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


இப்போது ஆகிவிட்டான். பாவம் ! காசம் என்ருல், பின்னே சும்மாவா ? துக்கம் சொக்கியது. பொன்னத்தாவிடம் சொக்கி விட்டவன் அல்லவா ? அவள் அழகு அப்படி ; உடல் வாகு அப்படி ; பேச்சு அப்படி , மூச்சு அப்படி ! சொக்குப் பொடி வைத்திருந்தாளா அவள் ? ஊஹல்ம் சரி அவன்தான் அந்தப் பொடியை லேஞ்சில் முடிந்து வைத்திருந்தான ? அதுவும் கிடையாது பின்னே ?-பின்னேயோ, அல்லது முன் னேயோ ஏற்பட்ட பொசிப்பு-தாலிப் பொசிப்பு அவர்கள் இருவரையும் முடி போட்டு விட்டது. வேடிக்கைப் பார்த்தது பனங்குளம், - வெளித்திண்ணையில் வேப்பங்காற்றின் வாடையில் துணியை உதறிப் படுத்தவன் மருந்துப் பையைத் தலைமாட் டில் வைத்துக் கொண்டே, குறட்டை விடலானன். அரையே வீசம் நாழிகை ஒடியது. ஆத்தா பிடாரி !’ என்று தன் குல தெய்வத்தை உதட்டில் நிறுத்திக் கொண்டே எழுந்தான். கொண்டவளை பாசம் கொள்ள, அன்பு மேலிட, நேசம் பெருக் கெடுக்க, மீண்டும் கூப்பிட்டான் காசி. சூன்யம் கைகொட்டிச் சிரித்தது. எங்கே பொன்னத்தா ? பொன்னத்தா எங்கே ? ஏதோவொரு நினைவு கொடி மின்னலாக அவனுள் திடு திப்பென்று ஒட்டம் காட்டியது. உந்திக் கமலம் கிட்டிப்புண் கழிபட்ட பாங்கில் பதைபதைத்தது. ஊக்கம்! பொன் ஒத்தா நல்லகுட்டி இருவத்தஞ்சி மாசமா ஒட்டிக்கெடந்த பந்த பாசத்தை உதறிப்பிட மனசொப்புற கழுசடையில்லே , புறம்போக்கு இல்லே. குடிக்காணியாட்சிப் பாத்தியம் கொண்டவன் நான் இருக்கேனே! பிடாரி ஆத்தா, எம் மனசான மனசிலே இம்மாங்காலமாத் தோளுத ஒரு கெட்ட நினைப்பை இன்னிக்கிண்ணு அருப்புருவமா எதுக்கு தோனச் செய்யிறே ?. அயர்வின் அழுத்தம் புகைச்சல் இருமலை