பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


  • பொன்னத்தா !”

உள் நெஞ்சம் அழைத்தது. வெளி நெஞ்சம் அழகு காட்டியது. சொக்கின்ை காசி. மறுநொடியில், ஏனே அவன் மேனி அல்லாடத் தொடங்கியது. பிடாரி ஆத்தா, எம் மானத்தைக் காத்துப்பிடு ' இருமல், கண்களைக் கலங்க வைத்தது , தும்மினன். கதவுகள். திறந்தன. மருந்துகளை ஈசான்ய முடுக்கில் காபந்தாக முட்டுக் கொ டுத்து வைத்தபின், பார்வையை மேயவிட்டான் காசி மேய்ச் சவிலிருந்து திரும்பிய கிடாரி கத்தியது. கத்தட்டும். எடுத் தஎடுப்பிலே, அவன் பார்வையில் கட்டுப்பட்டது. சோற்றுக் கலயம், மதியத்துக்கு காப்பித் தண்ணிகுடிச்சுக்குடுங்க. அந் திக்கு வந்தடியும் சுடுசோறு ஆக்கிப் போடுறேனுங்க, மச் சான். மாங்கொட்டைலாவி,ஆக்கினகுழம்பு வச்சிப்பிடுறேன். வெள்ளெனவே வந்துப்துபிடுங்கங்கிறேன் ! என்ருள் ! கல யத்தில் ஆவி பறந்தது. காசியின் இடுக்கு விழுந்த கண்கள் தளும்பின. வெளிப் புறத்துத் தாழ்வாரத்தின் மேல் வச உத்தரத்தில் வைத் திருத்த புகையிலப் பொட்டலத்தை எடுத்த போது, மற் ருெரு சாவியும் சேர்ந்து விழவே, சோர்ந்து போய்க் குன்ந்து அதை எடுத்தான். பூட்டைப் பூட்டி ஒரு நாளும் இப்படி வைக்காதே எங்க பொன்னத்தா?...என்ன சங்கதி, ஏது சங்கதின்னு ஏதொண்ணுமே விளங்க வில்லையே? நினைவு கள் தறிகெட்டுச் சுழன்று, ஒன்ருே டொன்று முட்டி மோதிக் கொண்டு, அவனைப் பாடாய்ப்படுத்தின. தும்மல் நிற்கவில்லை. கோழிகள் அடையத் தொடங்கின. மணக் கொல்லேயில் வாசம் செய்த ஏழெட்டுக் குடிசைக் காரர்களும், ! வெளக்கு வைக்க வந்துப்பிடும் பொன் ஒத்தா ' என்று ஆறுதல் சொன்னர்கள். காசி விளக்கைக் கொளுத்தின்ை. விபூதிக் கொட்டுக் கடையில், பொன்னத்தானின் தங்கக் கழுத்திலே திருப் 18 - -- - - -