பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 மனிதனின் மனம் மட்டும் தான் அடிக்கடி பச்சோந்தி பாக நிறம் மாறும் என்பதில்லை ; வானமும்தான் நிறம் மாறுகிறது. இருந்திருந்தாற்போலே, ம ப் பு ப் போடத் தொடங்கிற்று . ஆம். பவளக்கொடி இனி குச்சுக்குத் திரும்பியாக வேண்டும். பொட்டுப் பொழுதுகூட தாமதிக்கக் கூடாது. ஆத்தா தள்ளாமையோடு உருகித் தவித்துக் கிடப்பாள், பாவம் ! ஆசைக்கும் ஆஸ்திக்குமாக, ஒரேயொரு கறிவேப்பிலேக் கொழுந்து. விதியின் பிழை அது -மற்றபடி, அப்பன்காரனே பிழை சொல்ல இயலாது. இருபது குழி சோளப் புஞ்சைத் தாக்கு, வானம் பார்த்த மண்ணில் வானத்தையே பார்த்துத் தவம் இருந்த கேணி ; இரண்டு பசு , நாலு ஆட்டுக்குட்டி கொஞ்சத்துக்குக் கொஞ்சம் ஏதோ சேர்த்து வைத்துவிட்டுத் தான் கண்களை மூடிக்கொண்டான். ஓ, அமாவாசைக் கெடு வேரு ? -ம்...கஞ்சிப் பொழுதுக்கு உப்புக்கல் தூவிக் கஞ்சி குடித்தவள். பசிக்கும் , தாராளமாகவே பசி எடுக்கும். கன்னிப் பசி ஆயிற்றே பயணப்பட வேண்டியதுதான். போகும் வழியில் ஆயி பத்திரகாளியைக் கண்டு தண்டி, ஒரு கூழைக் கும்பிடு போட்டுவிடவேண்டும் ஊருக்கு மூத்த வளைத் தரிசிச்சு உண்டன நாள் ஆச்சுதே 1-பக்தியில் பாசம் மனிதாபிமானத்துடன் உருகியது. கன்னிக்குக் கன்னி இரங்க வேண்டாமா ? ஒரு பட்சி எங்கிருந்து ஏனே கரைகிறது ! அவளுக்கு - பவளத்துக்கு என்னவோ ஒரு பயம் நெஞ் சைத் துண்த்தெடுக்கத் தலைப்பட்டது. காப்புக் கடந்த ஆத்த காப்பாக இருக்கையிலே, நான் என்னத்துக்கு அச்சப் ஆடிோதுகாம்? - -- என்ன அரவம் அது? கால்களின் சதங்கை ஒலியா?