பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 " ஏலே, பொண்டுகளா ? ஒ, செவ்வந்திக்குட்டி ஏட்டி, பூரணியோ ...அடியே, கருப்பாயி !... . . . கூட்டுக்காரி ஒருத்தியையுமே காணுேமே ? கண்கட்டு மாயமாய் அந்திக் கட்டிலே எங்கே தொலைந்தார்களாம் ?... ஒரு வேளை, ஈசான்ய முடுக்கில் இருந்த பத்திரகாளி கோயில் கம்மாயில் விழுந்து புரண்டு கொண்டிருப்பார்களோ ? விடி சாமத்திலே அபூர்வமான அதிசயமாக வானம் கண் திறந்த தன் விளைவாக, வயல் வரப்புக்களைச் செய் நேர்த்தி பண்ணி நிலக்கடலை விதைக்க பூர்வாங்க ஏற்பாடுகள் செய்வதில் முனைந்திருந்த அந்த பெண்களுக்கு ஈரம் தேவைப்பட்டாலும் தேவைப்பட்டிருக்கலாம். இனியும் இந்தப் பொட்டல் காட்டிலே தனியே நிற்கக் கூடாது. சவுக்குத் தோப்பிலிருந்து கொய் - கொய்' என்ற அரவம், அரவம் சீறுவது மாதிரி கேட்டது. அந்த இடுக்கில் பத்திரகாளி கோயிலின் கோபுரக் கலசம் துலாம்பரமாகவே தெரிந்தது. - • பவளத்துக்கும் உடம்பு அரித்துப் பிடுங்கியது. முதுகுப் புறத்து ரவிக்கையை நீ ம் பி வி ட் ட வளாக ச் சொரிந்து கொள்ளலாளுள். மாங்குடிச்சேரி எல்லையில் இருந்த சாம் பான் தாக்குப் புஞ்சைக்காட்டில் ஆயி சகிதம் இவளும் மண்ணே கதி என்றிருந்தவள் தான் இனிமேல் பயம் இல்லை. பஞ்சம் பஞ்சாய்ப் பறந்துவிடும் ஆடிப்பட்டம் பலன் காட்டி;விடும் .ஆமாம் ; வானம், ஒரு முறை கண் திறந்து விட்டால், அப்புறம் கொட்டாமல் நிற்காதாம் !சிதைப் பாட்டி சொல்லமாட்டாளா ?- குளிக்கலாமா ? ஊகூம், ஏலாது ; கூடாது மல்லுக்கட்டி எப்படியாச்சும் சவுக்கைக் கட்டைத் தூக்கித் தலை மேலே வச்சுக்கிட்டு நடந்து போய், பத்ரகாளிக்கு ஒரு கும்பிடு போட்டுப் புட்டு, மேற்காலே மறுகி நடந்து, ஆவணத்தாங்கோட்டைச் சாலை எல்லையை மிதிச்சிட்டா, அப்பாலே, இருட்டும் ஒண்னும்