பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


செஞ்சிடாது ; பின்னே, எதுவும் எதையும் செய்ய வாய்க் காது !! மண்ணின் ஈரம் கண்களில் கசிகிறது. வேடிக்கைதான் ! மப்புக் கலையத் தொடங்குகிறது; மஞ்சள் கதிர்கள் பொன் முலாம் பூண்டு, பொன் மூலம் கொண்டு சுவடுகாட்டிக் கண்ணுமூச்சி காட்டிக்கொண்டிருக்கின்றன போலும் ! பத்தைச் செடிப்பக்கம் அரவம் கேட்டது யாரையுமே காணவில்லையே .... இப்போது பவளத்திற்கு ஒரு புதுத் தெம்பு. பழைய நெஞ்சுரத்திற்கு புதிய பலம் கூடியது ; கை கூடியது. ஆத்தாடியோ '-மூச்சைப் பிடித்துக் கொண்டே, சவுக்குக் கட்டை லாந்தித் தூக்கி தலைச் சும்மாட்டில் பொருத்தி வைத்துக்கொண்டே, இடதுகால் பெருவிரலால் வாங்கரி வாள் கம்பை வாகுகணித்து எடுத்து வலது கைப் பிடிப்பில் ஏந்தியவாறு நடக்கத் தொடங்கிள்ை. பவளக்கொடி-! அழகுச் சிலையாக-மோஹினிச் சிலையாக ...உள்பாவாடை இப்போது கால்களில் பின்னவில்லை ! தொடரும் விதி. விதிக்கு மட்டும்தான் என்றில்லை . நிழலுக்கும் அவ் விதி உண்டோ? அந்திக் கன்னியின் கண் பொத்தி ஆட்டம் தொடர் கிறது; தொடர்ந்துகொண்டிருக்கிறது. நல்லவேளை, மப்பு போட்டு வைக்கவில்லை. ஆடி மேகத்தின் மனத்தை யாரால் படிக்கக்கூடும்?-சித்தம் போக்கு, சிவன் போக்கு பவளம் நடக்கிருள் ; நடந்துகொண்டே யிருக்கிருள் ! سس தலை மட்டிலும் சுமக்கவில்லை; நெஞ்சுந்தான் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது போன்ற வேதனை : பயம்; தவிப்பு; தன்மை. சுள்ளி பொறுக்க கூடமாட வந்த தோழிமார்களைக் காணவில்லை. குளித்துக்கொண்டிருந்தா லும் இந்நேரமா குளிப்பது சே.அச்சம் இல்லாத பெண்டு