பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


கள் ஒரு வேளை, எதையாவது காற்றுக் கருப்பைக் கண்டு பயந்து பறந்திருப்பார்களே? ஒன்றும் மட்டுப்படவில்லை : விளைவு, பயம் கூடியதுதான் மிச்சம். எப்படியாவது காலா காலத்தில் வீட்டு வாசலை நல்லபடியாகவும் நல்லதனமாகவும் பத்திரமாகவும் பண்பும் பதவிசாகவும் மிதித்தால்தான் தல்ல உயிர் வரும் நல்ல மூச்சும் திரும்பும். இந்நேரம் ஆத்தாக்காரி வயற்காட்டிலிருந்து மீண்டிருப்பாள். பாவம், இந்தக் கெட்டவளோட மேனிக்கு ஒத்துக்கொள்வதில்லை. இருமல் விட்டால்தானே ? வயசும் ஆகிவிட்டது. அத்தோடு, சோறும் ஆக்கி வைத்துக்கொண்டு, திட்டி வாசல் வேப்பத் துணரடியில் காத்துத் தவம் இருப்பாள் "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நீ ஒனக்கு அக்கம்பக்கம் மெச்சருப்பிலே கண்ணுலம் காட்சியை மோக்ளாவாகச் செஞ்சு முடிச்சிட் டால் தான் எங்களுக்குப் பெருமை. உன்னுேட நேசமச்சான் கிட்டே ஊரறிய, உலகம் அறிய, ஆத்தா மூத்தவ பத்ரகாளி அறிய நீ ஒண்டிக்கிட்டால்தான் ஒனக்குப் பெருமிதம் ! பூநாகமெனச் சீறியது நெட்டுயிர்ப்பு. பார்பகம் எம்பி எம்பித் தாழ்ந்து கொண்டிருந்தது. காட்டு வழியில் வண் னத்துப் பூச்சி விதிக்குப் பயப்படாத பாவனையில் சிறக டித்துச் சுயேச்சையாகப் பறக்குமே, அப்படி ! - ஒன்றிரண்டு காக்கைகள் மாத்திரமே இப்போது கடு நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்னமும் பொழுது இருக்கிறது. பலே !. பத்திரகாளியின் ஆலயம் இதோ வந்துவிட்டது. சாலப் பரிந்து, பாசம் சொரியும் அன்புத்தாயை எண் னிய மாத்திரத்திலே நெஞ்சில் பீறிடும் பாச வெள்ளத்தில் பொட்டுப் பொழுது மெய்ப் பறக்கவும் பவனக்கொடிக்கு முடிந்தது. ஊராண்டு உலகாளும் பத்ரகாளி ஆத்தாளே ஒரு நடை கும்பிட்டுப்புட்டு, சுருக்கென திரும்பிடனும். ஆத்தா துணைக்குக் காவல் இருக்கையிலே, நான் எதுக்குப் பயப்படவேணும் ?......அல்லாத்துக்கும் ஆத்தா ஒருத்தி,