பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i: மச்சான் !! அடிக்கோரு முறை போன்னத்தா சொல்லு வாள். மீண்டும் ஒரு தரம் சொல்ல, பொன்குத்தாவைக் காணவில்லை ! சிம்னி விளக்கத்தைத் துரண்டி விட்டான் காசி, வயிற் றைப் புரட்டியது கை எட்டும் வசத்தில் இருந்த நீராகாரத் தைப் பருகக் கூட அவனுக்கு நாட்டம் இல்லை. ம ன ம் குமைந்தது ; எரிந்தது. திறந்து வைக்கப்பட்டிருந்த பெட்ட கத்தின் மீது திறந்த விழிகளை ஒட்டினன். பொன்னத்தர்வுக் கென்று செய்து போட்ட நகை நட்டுக்கள். அவளுக்கென்று எடுத்த துணி மணிகள் எல்லாம் அப்படியே இருந்தன. தென் புறத்தின் மூலையைப் பார்த்தான் அவன். அவள் இந்த மண்ணில் கால் பதித்தபோது, அவளது உடைமையாகக் கட்டிக் கொண்டு வந்த சுங்கடிப் பச்சைச் சேலையும் தட்டு மறித்த ஊதா ரவிக்கையும் அங்குதான் தொங்கிக் கொண் டிருக்கும். அவை இரண்டையும் இப்போது காணவில்லை 1. ரக்கப் பெருமூச்சு, பெருச்சாளி அட்டகாசம் செய்தது. தருநீற்றுமடல் நழுவி விழுந்தது. அதில் இருந்த தாலிச் சரடு பரிதாபமாகத் தரையில் நிலைகுப்புறக் கிடந்தது, அதை எடுத்தான் காசி. கைகள் நடுங்கின. ஈர்க்குச்சிக் கைகளால் அதைப் பத்திரமாகப் பற்றியபடி, கண்களில் ஒற்றிக் கொண்டான். முழங்கைகளில் ஈரம் படர்ந்தது. மச்சான் ’ என் சாதிசனம், ஆடுவாசல் அல்லாத்தையும் ஒங்களே நம்பி உதறிப்பிட்டு ஓங்க பின்னடி வந்திட்டனே. கடைசிவரைக் கும் நீங்க மனசு மாறிடாம, என்ன வச்சுக் காப்பாத்திட வேணும், என்று சொல்லி வரம் கோரி கையடித்து வாங்கிக் கொள்ளவில்லையா அவள் ? பங்குனி உத்தரத் த்ெப்பம், நகரம்-சேந்தாங்குடித் தெப்பம் என்ருல், அண்டை அயலில் பதிகுறு கிராமங்களுக் குள்ளாக ஏகப் பிரசித்தம். காசி திருநாள் காணச் சென் முன் திருநாளைக் காணும் வழியில், பொன்னத்தாவைக் கண்டு கொண்டான். அந்தி சாய்வதற்குள் அவனும் அவளும் பல தடவைகள் சந்தித்துக் கொண்டார்கள். ஒரு