பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


அதுபேரிலே ?...எம்மாம் தீவினை செஞ்சுடுச்சு அது ?...'தாலிக் சரடு அவனது துயரத்தையும் சந்தேகத்தையும் வளர்த்தது. வயிறு எரிந்தது. மறந்திருந்த அந்தப் படங்களேக் காற்று காட்டியது, மீளவும். சேட்டை கெட்ட தன்னே ஒரு முறை ஆற்ருமையோடு, ஏக்கத்தோடு, வேதனையோடு பார்த்துக் கொண்டான் காசி. வான்நிலவு மனநிலவின் பழங்கதையை நினைவூட்டியதோ ? என்னே பொன்னுத்தா மறந்திட-அம்மாஞ் சுருக்கன மறந்திட எப்படி ஏலும் ? என்னலே பொன்னத்தாவை இந்தச் செம்மத்துக்கு மறந்துப்புட ஏலவே ஏலாது'!...நன்னி கெட்ட நாயில்லே நான் ..., கைகளை ஊன்றிய வண்ணம் மெள்ள எழுந்தான் காசி. கோணல் கிராப்பு முடிகள் கண்களேக் குத்தின. கோபத் தோடு ஒதுக்கிவிட்டான். பொன்னத்தா என்னை ஏச்சுப் புட்டு மெய்யாலுமே எங்கிட்டும் ஒடியிருந்தாக்க, அப்பாலே நான் இந்த ஊர் நாட்டிலே எப்படி தலை நிமிர்ந்து நடப் பேன் ?...ஐயோ...பிடாரி ஆத்தா !”-கண்கள் க சிந் த ன. கசிவில் சொட்டிய ஒரு துளியைக் கையிலேந்தினன். இன்னியத் தேதி மட்டுக்கும் ஒரு வாட்டிகூட அழுது நான் அறிஞ்சதில்லே. அதுக்காகத்தான், இப்பிடி இப்ப எ ம் மானத்தையே விலை கூவ வச்சுப்பிட்டியா ஆத்தா மூத்த வளே ? மீண்டும் தனக்குத் தானே பைத்தியங் கொண்ட பாவனையில் சிரித்துக் கொண்டான். மீளவும் தன்னைத் தானே நோக்கினன். எம்மேலே நம்பிக்கை கெட்டுப் பூடுச்சோ அந்தக் குட்டிக்கு ?...'மருந்துகள் காட்டுக்கும் மேட்டுக்குமாகச் சிதறின. காசிக்கு இனி மண்டை தாங்காது