பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மைக் குதிரை டோய், பொம்மைக் குதிரை டோப் ஆடும் குதிரை டோய் ஏ. தாத்தா! எங்களுக்குக் கொஞ்ச நேரம் விளையாடத் தருகிருயா ? ஆளுக்கு ஒரு சவாரி, தாத்தா ! " மாயாண்டி திரும்பினன். பிஞ்சுக் குழந்தைகளின் ஆனந்த ஆரவாரம் அதிகரித்தது. கிழவன் சிரித்தான். தலையில் இருந்த பொம்மைக் குதிரையைத் தரையில் வைத் தான். - தாத்தா, எனக்குத் தான் முதலிலே சவாரிக்குத் தர வேண்டும் குதிரையை. ’’ அந்தப் பத்துக் குழந்தைகளும் அதையே கேட்டன : ' ஆகட்டும் ' என்ருன் அவன். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி வெள்ளம் ; அன்பு உள்ளங்களின் இன்பச் சூழல் அது. தன் காரணப் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளப் படாத பாடு பட்டது. பாவம், அந்த ஆடும் குதிரை. “ இவர் நல்ல தாத்தா டோய் ! தங்கமான தாத்தா டோய் ! ’’ மாயாண்டியின் வலது கை மோதிர விரலில் கண்ணிர் முத்து ஒன்று சிரித்தது. நடந்தான். குறி வைத்து ஏதோ ஒன்றைத் தேடுபவன் மாதிரி அவன் விசையாக நடந்தான். பொம்மைக் குதிரையில் அவனுடைய தளர்ந்த விரல்கள் இழைந்திருந்தன.