பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


  • வரட்டுங்களா ?”

கொஞ்சம் நில்லப்பா மாரியப்பா !” ஆச்சியைக் கலவரம் சூழ நோக்கினன் மாரியப்பன். வேர்வைதான் கொட்டியதா ? -

  • மாரியப்பா, மூணு வரு சத்துக்கு முந்தி வியாபாரத் தோதுக்காக எங்க வீட்டுக்காரச் செட்டியார்கிட்டே கடன் கேட்டுக் கெஞ்சி வாங்கிக்கினு போனே. நாளை புதன் கிழமை அந்தப் புரோ நோட்டு காலாவதி ஆகுதின்னு, நேத்து உன்கிட்டே வந்து செல்' வச்சுக் கொடுன்னு செட்டி யார் கேட்டதுக்கு, அதெல்லாம் முடியாது. முடிஞ்சாக் கோர்ட்டிலே போட்டுத் தாவா பண்ணிக்கிடுங்க'ன்னு எடுத் தெறிஞ்சி நிட்டுரம் பேசிட்டியாமே ? தர்ம நியாயம்னு ஒண்ணு இல்லையாப்பா ?’ என்று வேதனை தாளாமல் கேட் டாள் வள்ளியம்மை.

'மர்ரியப்பன் அசட்டுச் சிரிப்பை வெளி யிட்டான். " ஆச்சி. தர்ம நாயம்னு ஒரு சங்கதி எப்படிங்க இல்லாமல் இருக்க ஏலும் ? நேத்து அந்திக்கு நேரம் கெட்ட நேரத்திலே வந்து காட்டமாப் பேசிளுங்க. வட்டியும் முதலும் கைக்கு மெய்யா வந்திடணும்னு சட்டம் படிச்சாங்க. இல்லாட்டி பிராது பண்ணிப்புடுவேன்னு பயம் காட்டினங்க. ஒட்டிக்கு ரெட்டியாய் எழுதிக் கொடுத்த நோட்டைக் கோர்ட் மேலே போட்டுப்புடறதா அழிச்சாட்டியம் பண்ணினதும், எனக்கும் கோபம் மூண்டிரிச்சுங்க. நான் கை நீட்டி வாங்கின கடன் இரு நூத்தி அம்பதுதானுங்க. இந்த அசலையும் அதுக்கு உண்டான வட்டியையும் எப்படியும் நாளேக்குப் புதன் உச்சிக்கு வந்து கட்டிப்புட்டுப் புரோ நோட்டைக் காது கிள்ளி வாங்கிக்கிட்டுப் போயிடறேனுங்க. நூ. த் துக் கு மாசம் ஒண்னுக்கு ஒரு ருபாய் வட்டின்னு எங்களுக் குள்ளாற வாய்ப் பேச்சுங்க. செட்டியார் வந்ததும், நான் எழுதிக்கொடுத்த நோட்டை எடுத்துப் புள்ளி போட்டு