பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i58 வச்சிடச் சொல்லிடுங்க. நான் வருத்தப் பட்டதாகவும் ஐயாகிட்டே சொல்லுங்க. புறப்படுறேன். பசிக்குது : ' என்று சொல்லிப் புறப்பட்டான் மாரியப்பன்.

  • மாரியாத்தா ' என்று அமைதி கனியப் பெருமூச்சு விட்டாள் வள்ளியம்மை.

அறந்தாங்கியிலிருந்து இரண்டேமுக்கால் மணி பஸ் ஸ்-க்குத் திரும்பிவிட்டார் சூளு பான . இம்மாதிரியான தருணங்களிலே, வீட்டில் அடியெடுத்து வைத்தவுடன், குழந்தைகளேக் கூப்பிட்டு, கொஞ்சிவிட்டுத்தான் விசிப் பலகையில் அமருவது வழக்கம். ஆனால், இன்ருே வந்ததும் வராததுமாக, அவர் நடைக்கு நடையைக் காட்டினர். கவலையோடும், கலவரத்தோடும் பீரோவுக்கு அடியிலும் சுற்றிலுமாக எதையோ தேடினர். பிறகு, இடுப்பில் செருகியிருந்த சாவிக் கொத்தை எடுத்துப் பீரோவைத் திறந்து, ஒரு துணிக்கட்டைப் பிரித்தார். அடுக்கடுக்காக வைத்திருந்த பிராமிசரி நோட்டுக்களேப் பதற்றத்துடன் ஒவ்வொன்ருகப் பிரித்துப் பார்த்தார். முகத்தில் ஏமாற்றத் தின் நிழல் படர்ந்தது. நெஞ்சு துரிதகதியில் அடித்துக் கொள்ளத் தொடங்கியது. எங்கே அந்தப் புரோநோட்டு ? சோற்று வட்டிலேயும் வெஞ்சனத் தட்டையும் கழுவி முற்றத் திண்ணையில் வைத்துவிட்டு, ' என் ைங்க ! பசியாறிட்டு மத்த அலுவலக் கவனிக்கப் படாதாக்கும்? ' என்று செல்லமாகக் குழைந்த வண்ணம் வந்து நின்ருள் வள்ளியம்மை. "வள்ளியம்மை, பழைய பேப்பர்க்கார மாரியப்பனேட. புரோநோட்டை ராத்திரி பீரோவிலேருந்து பிரிச் செடுத்துப் பீரோவுக்கு அடியிலே வச்சேன். விடியகாலையிலே பட்டுக் காட்டைக்குப் போய் அவனைப் பிராது பண்ணுறதுக்காகவே