பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159


ஞாபகமாய் எடுத்து வச்சேன். இப்ப அதை இங்கிட்டுக் காணலேயே ? நீ கண்டியா : - " ஐயையோ இல்லீங்களே, அத்தான் !’ " அட கடவுளே ஐநூறு ரூபாய் பெறுமதி கொண்ட புரோநோட்டாச்சுதே ?” வள்ளியம்மைக்குக் கையும் ஒடவில்லை; காலும் ஒட வில்லே ; கொண்ட கணவரை ஏறிட்டு நோக்கினுள் அவள். பிறகு, நோட்டு எழுதினது ஐநூறுக்குத்தான். சரி ; ஆன, அந்த மாரியப்பன் கைக்கு மெய்யாய் வாங்கினது அதிலே செம்பாதிதானமே ?’ என்று குறுக்கே மறித்தாள். சுப்பையா மனைவியை ஊடுருவிப் பார்த்துப் பெருமூச் செறிந்தார். ' வாஸ்தவந்தான் வள்ளியம்மை : கடவுளுக்குப் பயந்து லேவாதேவித் தொழில் பண்ணுறவன் நான் நேற்றுச் சாயரட்சை அந்தக் குடிகார மாரியப்பளுவது, என்னைத் துச்சமாய் மதிச்சுத் தூக்கியெறிஞ்சு பேசறதாவது அவ ளுேட புத்தியைத் தெளிய வைக்கிறதுக் காகவே பொழுது விடியக் கோர்ட்டுக்குப் புறப்பட்டுப் போகணும்னு இருந்: தேன். இல்லாட்டி நானு தப்புத் தண்டா காரியத்திலே இறங்குவேன்? நம்ப பணம் நமக்கு நிலைச்சால் பத்தாதா?’’ என்ருர், ஆத்திரமும் வேதனையும் இன்னமும் இடம் பெயர வில்லை. அது சரி. அந்த மாரியப்பன் இங்கிட்டாலே வந் தான ?’ என்று சந்தேகத்துடன் கேட்டார் செட்டியார், களை இழந்த வள்ளியம்மை கைகளேப் பிசையத் தொடங்கி ள்ை. " ஆமாங்க. பதினஞ்சு நாழிகைப் பொழுதுக்கு அந்த ஆள் வந்தானுங்க. அடுப்படிப் பரண் மேலேயும் வச்சிருந்த கடுதாசிக் கூடைங்களைப் பாழாய்ப்போன எலிகள் தள்ளிப் போட்டுச்சுங்க. எல்லாத்தையும் கூட்டி அவன்கிட்டே வித்தும் புட்டேனுங்க!' என்று மென்று விழுங்கினுள், மூச்சு முட்டி, வேர்வையும் முட்டியது.