பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


சுப்பையா கைகளை உதறினர். ஐயோ! காரியம் கெட்டுப் போச்சுதே ? பிராமிசரி நோட்டு, அந்தப் பாவி மாரியப்பன் கைக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்க வேணும் ! என்று ஏக்கத்துடன் கூறினர் அவர். இப்ப என்னங்க அத்தான் பண்ணுறது ? சுப்பையா பெருமூச்சு விட்டார். மாரியப்பனுக்குச் சுளே சுளேயா மூணு வருஷத்துக்கு முன்னே எண்ணிக் கொடுத்த சாடாவும் இனி ஆத்திலே வீசிப் போட்ட பணம் கணக்குத்தான் இயன்ற மட்டுக்கும் மனசறிஞ்சு நியாய மான பாதையிலே நடந்து சம்பாதிச்ச என் பணம் இப்படியா தொலைய வேனும் ? அந்த மாரியப்பன் என்னை மதிக்காமல் நடந்துக்கிட்ட கோபத்திலே அவன் ஒட்டிக்கு ரெட்டியாய் எனக்கு எழுதிக் கொடுத்திருந்த புரோநோட்டைக் கொண்டு அவனைக் கச்சேரிக்கு இழுத்துப்பிட வேணும்னு ஒரு தப்பான கள்ள நினைப்பு மனசிலே தோணிச்சே ? அந்தப் பாவத்துக்கு வட்டியும் முதலுமாய்க் கூலி கொடுத்திருக்காப் போலே ஆத்தா மாரியாத்தா !” கண்களைத் துவாலையினல் துடைத்துக் கொண்டார் அவர். வள்ளியம்மைக்கு இருப்புக் கொள்ளவில்லை அத்தான், மாரியப்பன் கிட்டே பேச்சுக் கொடுத்தேனுங்க. நேத்துக் குடிபோதையிலே வசம் கெட்டிருந்து உங்களை ஏசின தப்பை உணர்ந்து ரொம்பக் கிலேசப்பட்டான். அவன் நம்பளுக்குப் பட்டிருக்கிற கடன் தொகை ரூபாய் இருநூத்தி அம்பதையும் அதுக்குள்ள பேச்சு வட்டியையும் கணக்குப்படி நாளே உச்சிப் பொழுதுக்கு உங்க கையிலே கொண்டாந்து கொடுத்துக் கடனைத் தீர்த்திட்டு, நோட்டை ரத்துப் பண்ணி வாபஸ் வாங்கிக்கினு போயிடுறதாகவும் சொன்னனுங்க ' என்று விவரம் கூறினுள். ' குளு பா ை சுரத்தில்லாமல் ஊம் கொட்டினர். வள்ளியம்மையின் மனத்தைக் குற்ற உணர்வு அரித்தது. " தப்பு என் பேரிலேதான் இருக்குது. காகிதக் குப்பைகன்