பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161


நிறுவைக்குப் போடையிலே சோதிச்சுப் பார்த்துப் போடத் தவறிட்டேனுங்க, அத்தான் 1’ என்று தாழ் குரலில் தெரி வித்தாள். தொடர்ந்து, ' நான் இப்பவே சாலைக்குப் போய், மாரியப்பனைக் கண்டு தண்டி, அவன்கிட்டே எடைக்குப் போட்ட கடுதாசிகளைச் சோதனை பண்ணிட்டு வந் திடுறேனுங்களே ?’ என்ருள் அவள்: சுப்பையா விரக்தி தெறிக்கச் சிரிக்கலானர் : அந்த எமகாதன் மாரியப்பன் நம்ப புரோநோட்டை இந் நேரத் துக்குக் காகிதக் குப்பையிலேயே போட்டு வச்சிருப்பான்னு நினைக்கிறீயா, வள்ளி ? சுத்தப் பைத்தியக்காரியா இருக் கியே ? ஊம். எடைக்கு நீ பழைய பேப்பர்களைக் கொட்டை யிலே அந்த நோட்டு அவன் கண்ணிலே தடம் காட்டி யிருக்கும். அந்தக் கொண்டாட்டத்திலே, அரிச்சந்திர ஒட்டம் பணமும் கையுமாய் வந்திடுறதாப் பொய் புளு கிட்டுப் பறிஞ்சிருக்கான் ' என்ருர், வாங்க அத்தான், சாப்பிடலாம்.” ' எனக்குப் பசி இல்லை. ஒரேயடியா ராத்திரிக்கே சாப் பிடுறேன். இப்ப என்னைக் கொஞ்ச நேரம் தனியே விட்டு விட்டுப் போ, வள்ளி !’ புதன்கிழமை, ചാ தாண்டியது. வள்ளியம்மை வாசலுக்கும் உள்ளுக்குமாக ஆயிரம் நடை நடந்து பாதங்கள் தேய்ந்தது தான் மிச்சம். பழைய பேப்பர் வியாபாரி மாரியப்பன் இன்னமும் வரவில்ஆ, இனிமே மாரியப்பன் வரமாட்டான். வள்ளியம்மை பணம் போனதுதான்." 29.