பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


கம்மாய் கரையில் தோழிமார்கள் இல்லை :-பவளத்துக் குச் சுருக்கென்றது. இனி, கண்கொட்டும்பொழுது கூட இந்தக் காட்டு மெளியில்-வழியில் கால்தரிக்கக்கூடாது:மூச் : ஆத்தாளைச் சேவிக்க வேண்டும் ! பவளம், அந்தப் பத்திரகாளி கோயிலுக்குள் அடி யெடுத்து வைக்கின்ருள், புகையிலே எச்சிலைக் காறித் துப்பி விட்டு, வாய் கொப்புளித்து வர வேண்டுமென்று தான் நினைத்திருந்தாள் ; மறந்தாள். இனி போய் மீளமுடியாது ; நேரமில்லை !

  • ஆத்தா !” என்று பக்தியின் உணர்ச்சிகள் பொங்கிக் குமுறிக் கொந்தளிக்க வாய்விட்டு விளித்தவளாக உட்பிர காரத்தில் வந்து நின்ருள். ஒர்ச, காகம் இல்லை ; வெளவால் பண்ணைகளைக் கூடக் காளுேம். மேலக் குடியிருப்பின் புதிய பணக்காரரான கண்டிக் கங்காணி சிவலிங்கத் தேவர் இந்த வியாழச் சந்தைக் கெடுவிலே ஆத்தா பயங்கரிக்குப் பட்டுப் பாவாடை சாத்தி, சந்தன அபிஷேகம் செய்து, பள்ளயம் படைத்துக் கும்பிட்டு, நேந்துதல்-வேண்டுதல் செலுத்திய சங்கதியை எண்ணிக்கொண்டிருக்கையில், உள்ளே என்னவோ அரவம் கேட்கவே, அரவம் கண்ட பாவனையில் தட்டித் தடு மாறியவாறு, பார்வையை உள்வசமாக நெட்டித் தள்ளிள்ை. வெளிச்சம் விதியாக விளையாட வேண்டிய கருவறை யிலே, இருட்டு விதியாக விளையாட, ஒர் உருவம்...என்னவோ ஒர் உருவம் விதியின் சூட்சுமம் மாதிரியாகக் கண்டும் காணுமலும் தெரிகிறதே...

துரண்டாமணி விளக்கு எங்கே? பூசாரி உச்சிப்பூசை வைத்து விட்டு எப்போதோ காடுமாறி ஒடியிருப்பார் ! பின், என்ன சத்தம் அது? ... . - பவளம் ஒரு எட்டு எடுத்து வைத்தாள். இருளின் தவிப்பு; தகிப்பும் கூடத்தான் ! 笠 - - -