பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


பாவாடை வேணும்!...ஆமா...” விதியை வெட்டி வீழ்த்தும் அகங்காரச் சிரிப்புடன் கோவண ஆண்டியென இருட்டோடு இருட்டாக குமைந்து நின்ற அவன் அம்மன் பாவாடையை உரிவதில் ஈடுபடலாளுன் ! அவ்வளவுதான் !...

  • அட, பாவி !'

அந்தப் பாவியின் கரங்களை வெடுக்கென்று உடும்பாகப் பற்றி லபக்’கென்று கடித்துக்குதறிவிட்டாள் அவள். அவள் பத்ரகாளியா, என்ன ; அவள் பவளம் வீரிட்டுப் பீறிடட ரத்தத்தின் துளிகள் சிந்திச் சிதறித் தெளித்த அம்மன் பட்டுப் பாவாடையைப் பிடுங்கிப் பறித்து, அம்மனுக்கு மீண்டும் உடுத்தி விட முனைந்தாள் ; ஆத்தா மூத்தவளே! நாங்க ஒன்ளுேட குஞ்சுங்க வெறும் குஞ்சுங்க. ஆன, நீ வெறும் கல் இல்லே ஆனதாலே எங்களைச் சமிச்சு எங் களுக்கு மாப்புக் கொடு. தாயே ...இந்த மிருகம் தன் பிறவிக் கடனை மறந்து, அத்தோட தன் விதியையும் மறந்து, இப்ப பாவி ஆகிப்புட்டான் இவன் ஆத்திரத்திலே தப்புப் பண்ணிப் போட்ட தொப்ப நீ வெறும் கல் இல்லே என்கிற தெளிஞ்ச புத்தியை இவனுக்கு உண்டாக்கிக் கொடு, பத்ர காளி - ரத்தத்தைக் கண்ணிராக்கி விம்மிக்கொண்டே தேடிப் பிடித்த தீக்குச்சியைக் கொளுத்தினுள் ; நடுங்கிய கைகளால் பாவாடையை உடுத்து முடித்தாள். ' ஆத்தா !” என்று நெஞ்சு வெடிக்க ஒலமிட்டவளாக நெடுஞ்சாண் கிடையாகத் தாயின் பாதங்களில் சரணடைந்தாள், - - தூண்டாமணி விளக்கின் ഒിക്കേ - பத்ரகாளி - சிரிக்கிருளா ?-கன்னத்தில் சிவப்புப் புள்ளியா? இப்போதுதான் அவள் சுயப்பிரக்கினை கொண்டிருக்க வேண்டும் ! ஆனல்-அவன் பேயடித்த மாதிரி இரண்டாம் சிலையாக அப்படியே நின்று விட்டாள் இன்னமும்!