பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


'ஆத்தா!' கன்னிப் பவளம். கன்னித் தெய்வத்தைப் போன்று கல்லாகி விடவில்லை. சுயப் பிரக்கினையுடன் கண்களை வழித்து விட எத்தனம் செய்திட்ட அந்த வேளையிலே பூ நாகமொன்று அவன்' காலடியில்-அந்தப்பாவியின் காலடியில் பூவின் நெடியாக மலர்ந்து நெளிந்துகொண் டிருந்தது.

  • ஆத்தாளே மூத்தவளே !'

அவள் அந்தப் பூநாகத்தை மூர்த்தன்மையானபெண்மை யின் வீரச் சாகசத்துடன் காலால் எற்றிவிட்டாள் ! அந்தப் பாவியின் ஊனக் கண்களில் இப்பொழுதுதான் அந்தப் பூநாகம் தரிசனம் தந்திருக்க வேண்டும் மறுநொடி யில், “ ஆத்தாளே - தங்கச்சியே ' என்று அலறியவனுக அவனது கஞ்சமலர்ப் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடை யாகச் சரண் அடைந்தான் !-கண்ணிர் வெள்ளம் பூம்புனல் வெள்ளமென ஓடியது !.-ஒடக்காண்பது பூம்புனல் தானே?... கனங்கள் பேய்க்கணங்களாக நெளிகின்றன ; ஊர். கின்றன ; நடைபயிலவும் செய்கின்றன ! . அவள் தண்ணளியின் விளிம்பில் தன்னுணர்வை மீட்டுக் கொண்டாள் : கல் நிலையினின்றும் மீண்டாள் ; இனி அவள் கல் இல்லை. -தெய்வம் கல்லாகவே இருந்துவிட்டுப் போகட் டும். ஆனல் அவள் கல் அல்லள் - அண்ணுச்சி !' என்று சாலப் பரிந்து, அளப்பரிய பாசம் மீதுர்ர விளித்து, அவனே -அந்தப் பாவியை வாரி எடுத்தாள் கண்கள் பொடித்தன. அவன் கூபபிய கைகளுடன் அப்படியே நின்றன். :தங்கச்சி எந் தங்கச்சியோ தம்பூட்டுத் தெய்வமே !' எங்கிருந்து அந்தச் சாக்கிருவி அப்படிச் சோகம் பரப்பிக் கொண்டிருக்கிறது ?