பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


விட்டெரிந்த அந்த மேலை நாட்டுக்கன்னியர்கள் அவ்வாறு கோலம் பரப்பி நின்ருர்களோ ? ரூம் வேனும், ஸார்!’ ஆறு அங்குலம் சுருட்டு ஒன்று அனயாசமாகப் பற்றி எரிந்தது. மேகநாதன் அவரைப் பார்த்துவிட்டு மீண்டும் கனத்தான். ' அதற்கென்ன ?’’. பதில் மொழிந்த அவர், மேகநாதனையும் தாராவையும் ஒரு பயணம் நிமிர்ந்து பார்த்தார். புகைச்சுருள்கள் ஒதுங்கின. வலது கை, மூக்குக் கண்ணுடியைச் சற்றே விலக்கியது. அந்தக் கைக்கென்று ஸ்பெஷலாகச் செய்த தங்க வடமோ அது?... " டபிள்ஸ் ரூம் லார் !” மேகநாதனுக்கென்று ஒர் அவசரமோ, ஆதங்கமோ!தோல் பைக் குச் சுறுசுறுப்பு மிகுதிதான் ! உரிமையாளர், பார்வையை இழுத்துக்கொண்டார் ; அமைதியுடன், ' எஸ்.எஸ்...!” என்று சொன்னர். அமரும் படி வேண்டினர் ; தொழில் முறைச் சாதுர்யம். ஜஸ்ட் எ மினிட்...ப்ளீஸ் 1’ என்று நயந்தார். தாராவும் மேகநாதனும் எதிரும் புதிருமாக நின்று நகை இழைக்கலாயினர். - அழைக்கும் மணி அழைத்தது. பையன் என்ற பெயரு டன் கிழவர் ஒருவர் வந்தார். மதுபானக் கூடத்தின் முதலாளி வேலையாளிடம் குறிப்புக் கள் சொன்னர். வாடிக்கைக்காரர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள், பிஸினஸ் அபாரம்தான் ! "அத்தான்!..." ' ம்!...என்ன தாரா ? ..??