பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


ஒருத்தனுக்குச் சொந்தமாயிருந்த இடமாம் அது. ஒரே கட்டில், இரண்டு மெத்தைகள். நிலைக்கண்ணுடி...இத்யாதி...! துப்பரவு செய்யப்பட்டது. வெளிச்சம் வந்தது அதற்குள் மேகநாதன் மெல்ல அண்டி தாராவின் காதைக் கடித்தான். நல்ல வேளை, காயம் ஏதும் இல்லை. காயத்துக்கு ஏதும்' இல்லை 1: இந்த அரேஜ்மெண்டைப் பார்க்கிறப்போ, எனக்கு நம்ம ஃபஸ்ட் நைட் ஞாபகம் வருது....!’ சிரிப்புக்கள் கை இணைத்தன. தோற்பையை மெத்தையில் வைத்தான், மேக நாதன் தாரா பவுடர் டப்பாவை நாடினள். " நான் வரட்டுங்களா, லார்?' என்று விடை கேட்டார் கிழவர். மேகநாதன் சரி சொன்னர், கிழவர் போய்விட்டார். மேகநாதன் நகைமுகையை இதழ்க்கங்கில் போர்த்தி மூடியவகை, கதவுகளே அடைக்க முனைந்தபோது, காக்கி உடுப்புடன் கூடிய இன்னொரு நபர்-ஹோட்டலின் வெயிட் டர்-ஏவலாள்-வந்து விட்டான். தாரா ஒதுங்கிக்கொண் டாள். அவன் பார்த்தபோது, அவள் முன் நிலைக்கண்ணுடி நின்றது. பிறைதுதலில் திகழ்ந்த பிறைத்திலகத்துக்குத்தான். எத்துணைக் கவர்ச்சி வெகு நுட்பமான கவர்ச்சி ஆண் டவன் மெய்யாகவே மாபெரும் கலைஞனே ....அதைவிட, *அவன்’ பரம ரசிகன் ....' ம்.... !! " ஸாருக்கு என்ன கொண்டு வரட்டும் ? இனம்புரிந்து கொண்டு இனம் பிரித்துப் பட்டியலே அடுக்கினன் அலுவ லாளன். - - - மேகநாதன் அமர்ந்த இடத்தினின்றும் எழும்பி, தாராவை நெருங்கி விவரம் கேட்டு மீண்டு, பணியாளிடம் விவரம் சொன்னன். அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அவ் வறையின் மேஜை அலங்காரம் பூண்டு விளங்கிற்று போதை நிரம்பி வ்ழிந்தது. 'போயிட்டு வர்ரேனுங்க ...ஏதேனும் தேவைப்பட் டால், இந்தப் பெல்லை அழுத்துங்க ஸ்ார் 1'-இடம் காட்டிச் சொல்லிச் சென்றன்.