பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


போட்ட மாதிரி உடம்பு வலித்தது. கண்களைத் துடைத்துக் கொண்டான், விழி ஈரம் நகக்கண்ணில் உறவு கொண்டது. அழுத்தித் திறந்தான், தாழ்ப்பாளை. என்ன கோலம் இது தலைவிரிகோலமாக, பக்கத்து அறை அழகி நின்ருள். மாலை மாலையாகக் கண்ணிர் தொடுத்தபடி நின்ருள் அந்த அழகுப் பதுமை ! "ஐயா .... என் கணவர் நேற்று நடுராத்திரியிலே யிருந்து ரொம்பவும் முடியாமல் இருக்காருங்க எல்லாத்தி லேயும் ரொம்ப ஒவராப் போனதாலே வந்த வினையுங்க ! ....எனக்கு பயமாயிருக்குதுங்க ஐயா ! ... ஐயையோ !” அவ ளது கழுத்துத் தாலியில் சுடுநீர் தெறித்தது ...அவள் விம்மி ளுள் ; அழுதாள் ; அலறிஞள். போதையும் போதமும் கலந்த அழகு எனும் திருவின் முன் அவன்-மேகநாதன் வாய் மூடி மெளனியானன்-அரை விடிை கண்களை மூடினன் பிறகு விழி திறந்தான். பாதி திறந்திருந்த கதவை மூடப்போனவன். தாராவின் நல்ல துரக்கத்தைக் கலைக்க ஒப்பாமல், மனம் ஒப்பிய கடமை பூண்டு, கதவை இழுத்து மூடிவிட்டு, அவளுடன் தொடர்ந் தான். ... - . . . - அவ்விளைஞன் சலனமின்றிக் கிடந்தான். அவனுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைக்கு ஆவன செய்தான். அடுத்த, பத்தாவது நிமிஷம் அவன் மெல்லக் கண்களைத் திறந்தான். அந்த அழகிக்கு வாய் கொள்ளாச் சிரிப்பு. "ஐயா ... நீங்க தெய்வமாட்டமே என் கண்ணுக்குத் தோனுநீங்க ... * பூங்கரங்குவித்து, பூவிதழ்ப் புன்னகை விரித்து, இ தாய்ந்த நன்றியைத் தெரிவித்தாள் ! மேகநாதன் சிந்தனைப் பிடியுடன், தன் அறைக்குள், தாரா!.டியர்!"என்று கூப்பிட்டபடி நுழைந்த நேரத்தில் அங்கு தாரா இல்லை ....