பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


அவன் துடித்தான். அந்தத் துடிப்பிற்கு ஒரு வரம்பு போல, அவனே அழைத்தது கடிதம் ஒன்று. பிரியமுள்ள காதலருக்கு, பெண்மையின் மேன்மையை நான் பரிபூரணமாக அறிந்திருந்தும், அப்பெண்மையைக் கட்டிக் காக்க வொட்டாமல், என்னை அழுத்திய வறுமையின் விதி என்னைச் சோதித்து வந்த கட்டத்திலே, நேற்று முன் தினம் நான் பரிசயமானேன் தங்க ளுக்கு என்னல் உங்களுக்கு மன நிறைவும் மன நிம்மதியும் கிட்டியிருக்கும் பட்சத்தில், அதுவே என் பாக்கியமாகும். அதையே என் கடமைப் பூர்த்தியெனவும் கொள்ளுவேன். அடுத்த அறைப் பெண் என்னிலும் கெட்டிக்காரி என்னை விட அழகி ; என்னைக் காட்டிலும் நல்லவள். நேற்று இரவு தாங்கள் எல்லாவகையிலும் அத்து, மீறிப் போன பின், தாங்கள் தன் நினவின்றிக் கிடந்தீர்கள். என் இதயம் துடித்தது. என் கண் களிலே துளி கண்ணிர் கூட சுரக்கவில்லை. ஆனல் சற்று முன் உங்கள் முன் தோன்றிய அழகியோ, இதயங்கலந்த நன்றியுடன், துடிப்புடன், தன்னு டைய ஒரு நாள் காதலனுக்காக மாலை மாலையாகக் கண்ணிர் வடித்தாள். ஆம், அவள் என்னிலும் நல்லவள் அவள் என் சோதரி...தொழில் முறையிலே அவள்-மேகலா தான் உங்களுக்கு ஏற்றவள்.இக்கடிதம் உங்க ளுக்குக் கலக்கம் தரும் பட்சத்தில், என்னைப் பட்சத்துடன் தயவு பண்ணி மன்னிக்கவேனும் உங்கள் தாலி எல்லாம் தோல் பையில் பத்திரமாக உள்ளன். ஆனல் ஒன்று :