பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


எனக்குச் சேரவேண்டிய கூலி ரூபாய் நூறை மட்டுமே எடுத்துச் செல்ல என் மனசாட்சி அனுமதி தந்திருக்கிறது ! உங்கள் இதயம் பெரிது ! இங்ங்னம் தாரா கூப்பிடு தொலைவிலிருந்த மாதாகோவில் மணி சோகக் குரலுடன் ஏன் அப்படி ஒலிக்கவேண்டும் ? மேகநாதன் விம்மிக் கதறுகிருனே, என்ரு ? ஆமாம், அவன் விம்மிக் கதறிக் கொண்டிருந்தான், ' கண்ணே கற்பகம் ....உனக்குத் திருப்பூட்டி ஒரு வருஷம் கழிவதற்குள்ளே, நீ விதி வழி ஏகி, என்னை இப்படிப் பைத்தியம் பிடித்து அலையச் செய்துவிட்டாயே என்னல் இனியும் இந்த நரகத்திலே உழல முடியாது !...நானும் உன் வழியே வந்து விடுகிறேன் !....கற்பகம் ! கற்பகம் !...!!