பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


" மூணு காசுக்குக் குடுப்பீங்களா ?” 《蔷 ஒ !” ஐந்து காசைக் கொடுத்த சிறுமி, கருவேப்பிலை கிடைத்த மகிழ்வில், பாக்கிச் சில்லரையைப் பற்றின ஞாபகம் இல்லாது நடந்தfள். கிழவர் சுருக்குப் பையிலிருந்து தடவி இரண்டு காசை எடுத்து வைத்துக்கொண்டு தலையை நிமிர்த்தினர். கைகளை முடிந்த மட்டும் ஒசைப்படத் தட்டினர். இந்தாத்தா, ரெண்டு காசு....” என்று பொக்கை வாயை அகலத் திறந்து, ஒர் அற்கான பாசச் சிரிப்பை உதிர்த்தபடி, இரண்டு காசு நாணயத்தை, அந்த நாணயத்தின் நாணயம் பங்கப்படாத ரீதியில், உரியவளிடம் நீட்டினர். தக்காளிக்காகத் தவம் இயற்றி, ஒற்றைக்காலால் நின்று கொண்டிருந்த செட்டியார் இன்னமும் நகரவில்லை. அறந்தாங்கி - நாகப்பட்டினம் எ க் ஸ் பி ர ஸ் அந்த ஆவணத்தாங்கோட்டைச் சாலையை அசட்டை செய்துவிட முடியுமா, என்ன ? கிழவர், மண்டையில் அடித்த உச்சி வெய்யிலைச் சட்டை செய்யாமல் இடது காதிடுக்கில் ஒளிந்திருந்த பாதி சுருட்டை வாய் ஊற எடுத்து, ஒரே தீக்குச்சியில் சமர்த் தாகப் பற்ற வைத்துப் புகையை இழுத்தார். புகையின் ரசிப்பில் வெகு சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார் மனிதர். ஏதோ சத்தம் கேட்டது. ஆடொன்று அவரது சோற்றுப் பானையை லாவிக் கொண்டிருந்தது. இந்த ஊரு நாட் டிலே பணக்காரங்க ஆடு அனந்தமா இருக்கே? அங்கிட் டாலே நாடிப் போவேன். இந்தக் கிழடு கதை ஒனக்குத் தெரியாது போலே. ஊருக்குப் புதுசோ ?...நான் வடிக்கிறது ஒரு நாளைக்கு ஒரு கடுத்தம். இந்த லச்சணத்திலே, நீயும் வந்துதான் தீரனும்னு அடம்பிடிச்சா, நில்லு, ஒனக்கும் போடுறேன். அல்லாச் சோத்தையும் நான் தின்னுதான் என்ன கண்டேன்?...நாத்த ஒடம்பு மேலுந்தான் நாறித்