பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


தொலையுது !’ என்று ஒரு பாட்டம்’ பேசிவிட்டு, தலையில் சுற்றியிருந்த ஹைதர்காலத்துவாலேயை நிமிண்டிச் சொறிந்து கொண்டார். ஈறும் பேனும் மண்டையைத் தாண்டிக் கொண்டு வந்திருக்குமோ?-கிழவர் இருந்திருந்தாற்போலத் தனக்குள்ளாக ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டார். ஒர் இமைப்பிலே, அச் சிரிப்பு மறைந்துவிட்டது ! கிழவர்...கிழவர் என்ருல் அவருக்கும் பெயரென்று ஒன்று இருக்குமே ? இருக்கும், இருக்கும் !-ஆல்ை, அந்தப் பெயர் யாருக் குத் தெரியும் ? ஆலமரத்தடிக் கிழவர் என்ருல், சுற்று வட்டையில் ' ஏகப் பிரசித்தம், கருர்ப் பேர்வழி. ழு பத் தி ரண்டு வருஷம் தன் ஜீவனைக் காபந்து செய்துகொள்ளப் பழகிவிட்ட அசகாயகுரர் அல்லவா அவர் : மிஸ்டர் எம தர்மராஜனுக்கு டேக்கா கொடுக்கப் பழகிவிட்ட படு சமர்த்தராம் கிழவர்.-பேசிக்கொண்டார்கள் அந்த ரகசிய மும் அவர் வரை ஒரு மர்மம்தான் ! சிந்தன வசப்பட்ட நிலையிலே, காய்கறிக் கடையை மறந்து, அந்த ஆட்டை கண் பாவாமல் பார்த்தவர், கண் மூடிக் கண் திறந்த வேளையில், அந்த ஆடு நல்லதனமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டதைக் கண்டு கொண்டார். அவரது இமைகளில் ஈரம் பனித்தது. மனுசங்க பாஷை தெரிஞ்ச வாயில்லாச் சீவன்...பாவம் 1.வாயுள்ளதாலே இந்த மனுசங் களுக்கு என்ன பிரமாதமாக்க் கொட்டுதாம் ம்...எப்படி யும் சாண் வயித்தைக் கழுவி மூடிக்கிடத் தெரியும். அம்புட்டுத்தானே !...ம்...அப்பாலே, கடோசீலே, அல்லாம் பிடி சாம்பலாகப் பூடவேண்டியதுதானே ...சே என்ன சென்மம்டப்பா இது 1 பிறவா வரம் வேணும்னு, அனுபவிச்ச புண்ணியவான் யாரோ பாடினர் .சுருட்டு சுட்டுவிட்டது. போலும் உதறினர். சாம்பல் தூள் பறந்தது.