பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


  • பெரியவரே கடைசியா என்ன விலை சொல்lங்க தக்காளிக்கு ?' என்று மீண்டும் கேட்டார் செட்டியார்.

“ ஒரே விலை இப்ப தக்காளி வேணுமா? இல்லே நான் பசியாறப் போவட்டுமுங்களா ?” " வேனும், வேணும். ஒரு அரைக்கால் வீசை தாங்க. படிக்கல்லைப் பார்த்துப் போட்டுக்குங்க.....ம்.....சரி.....சரி, இந்தாங்க பணம். இந்தப் படிக் கல்லுங்களே மாத்திக்கிடுங்க. இல்லாட்டி, எவனச்சும் வந்து புடிச்சிடப் போருன்: பெரியவரே !' " அப்படீங்களா ? பிடிச்சிக்கிட்டுப் போனப் போய்த் தொலையட்டுமே !....இந்தப் பதினைஞ்சு மாசப் பொழைப் புக்கு ஏதாச்சும் ஒய்வு கெடைச்சாக் கூட தேவலாம்தான்!” என்று அழகாகச் சிரிக்கலானர் காய்கறி வியாபாரி. திரும்பி வந்த ஆட்டுக்கு ஒரு பூவன் பழம் கிடைத்தது. “லொக்.லொக்...!" ஆலமரத்தடிக் கிழவர் இருமினல், அதில் சுருதி பேதம் இருப்பது சகஜமேயாயினும், பேதத்தைக் கடக்கத் தெரிந்த வர்களுக்குக் கட்டாயமாக அந்த இருமலின் சுருதியைத் தெரிந்து கொள்ளக்கூடும். - வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. அந்தி சந்திப் பொழுதல்லவா? உலை ஏறிவிட்டால், வெஞ்சனத்துக்கு வழி சொல்ல வேண்டாமா ? வழி சொல்லிக்கொண்டிருந்தவர் கிழவர். வேர்வை வழிந்தது. இருந்ததும், கந்தல் துவாலையை எடுத்து உதறக் கூட நினைவின்றி, அதை எண்சாண் உடம்பைச் சுற்றிா போர்த்திக் கொண்டார். அட்டணக்காவிட்டுக் குந்தி யிருந்தவரை பைசாச் சுருட்டு தேடிவந்தது.