பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


கோபித்துக் கொண்டு விட்டான். போறப்ப யாரும் எதை யும் தூக்கிட்டா போகப்போருேம்? நம்பளைத் தூக்கத்தானே நாலுபேருக்கு வேலை வைப்போம்?” என்று வேதாந்தம் படித் தான். அந்தப் பேச்சின் விதரண, வயசை மீறியதொரு வாக்காகவே பட்டிருக்க வேண்டும், வயோதிகருக்கு. அதி லிருந்து, அந்தப் பிள்ளையென்ருல் அவருக்கு ஒரு பிரியம். "நீங்க எந்த ஊரு ? ஒங்க பேரு என்ன ? இத்தன்ை வயசுக் கப்புறம் ஏன் இப்படிக் கஷ்ட ஜீவனம் நடத்த வேனும் ே உங்களுக்கு பிள்ளைகுட்டி இல்வியா ?’ என்றெல்லாம் துளைத்தான். " நான் அைைத. அதிலேயும் நாதியத்த ஒரு புறம் போக்கு. இதுக்குப் பெரிசா என்ன கதை வேண்டிக்கிடக்கு, காரணம் வேண்டிக் கிடக்கு ?...மூச்சு ஒடுற மட்டுக்கும் ஒடித் தொலைக்கட்டுமே மூச்சு நின்னுட்டாக்க, நல்ல மனுசங் கன்னு ஈவுஇரக்கங்கொண்ட தலைங்க நாலா இந்த நாட்டிலே அத்துப் போயிடும்? அவங்க இந்தச் சனியனைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போகட்டுமே ?’ என்று அடைத்து விடுவார். உடனே தாயே பராபரி ... அங்காளம்மை !”...என்று ஒர் ஆறுதல் கொள்ளத் தவறுவதில்லை. சாலையிலே ஒர் அப்பனும் மகனும் சண்டை போட்டுக் கொண்டார்கள். - கிழவர் ஆத்திரத்தோடு எழுந்தார். ஏம்ப்பா தம்பி, பெத்த அப்பனையா எதிர்த்துப் பேசி, கைநீட்டப் போறே? போப்பா, விலகி !' என்று தந்தையையும் மகனையும் விலக்கி விட்டார். " காலம் மாறிப் போச்சு, நீங்க நடங்க சேர்வை' என்று சமாதானம் செய்தார். சுருக்கம் படிந்து கிடந்த அவர் முகத்தில் வேதனையும் விரக்தியும் நிழலாடின. ஜன நடமாட்டம் கம்மிபடத் தொடங்கியது "இந்தாருங்காணும், இதுகளை எடுத்துக்கும். நாளேக்கு இருந்தா, தூக்கி எறியத்தான் வேணும் 1’ என்று சொல்லி