பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மத்திலும் இயங்கிட வேண்டாமா ?-பிறவி எனில், அந்தப் பிறவிக் கடல்ேத் தாண்ட, அதற்கென்று ஆதர்ச பூர்வமான ஒரு வாழ்க்கை வேண்டும் அல்லவா ?-அந்த வாழ்க்கைக்கும் ஒரு விதி தேவை தானே ?-அந்த விதிக்கும் ஒரு விதியாக அமைகின்ற சித்து விளையாட்டிற்குப் பெயர் தான் கதை :-நடைமுறை வாழ்வியலின் யதார்த்தமான கதையும் அதுவே ! உலகிலே மனித ஜாதி தோன்றிய காலந் தொட்டுக் கதை சொல்லும் ஆசையும், கதை கேட்கும் ஆர்வமும் தோன்றியிருக்க வேண்டும். அப்படியென்ருல், அந்த ஆண்ட வன் தான் ஆதிக் கதாசிரியனுக இருப்பானே ? ஆனல் ஒன்று-அலகிலா விளையாட்டுடையானுக்குக் கதை சொல்ல மட்டும்தான் தெரியும் போலும் !-கதையைக் கேட்கவும் தெரிந்திருக்க வுேண்டாமோ ? g: !, முன்னம் நான் எழுதிய முன்னுரை யொன்றில் இவ் வாறு குறித்திருந்தேன். வாழ்க்கைக்கு உட்பட்டு, ஆளுல் விதிக்கு உட்படாத ஒரு விதியை நிர்ணயப்படுத்தி இயல்பாக ஆரம்பமாகி, இயல்பாகவே முடிகின்ற ஒர் உணர்ச்சியின் ஜீவன்தான் கதை :-மெய்தான் பாரத நாடு பழம் பெரும் நாடு, இவ்வுண்மை அன்று பாரதிக்குத் தெரிந்து இன்று நமக்கும் தெரிந்தது. ஆளுல் இங்கே இப்பொழுது, எதற்குப் பஞ்சம் வந்தாலும் வரலாம் : பசிக்கும் பிரச்னைக்கும் பஞ்சமே வராது. இந்த அந்தரங்கம் இயற்கைக்கும் தெரிந்து விட்டது! பிரச்சினை இல்லையென்ருல், வாழ்க்கை இல்லை; எனவே தான், வாழ்க்கையும், அவ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதையும் கூட ஒரு பிரச்சினையாக-கிக்கலாக-சிக்கறுக்க