பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


நான் உங்களுக்குப் பாத்யதை அற்றவள் என்பதை நான் உணர்ந்துகொண்டு-என் மனச்சாட்சி அறிவுறுத்தி நாட்கள் பல ஆகப் போகின்றன. ஜோதிநாத் உங்கள் கண்ணே உறுத்திக் கொண்டேயிருந்த ரகசியத்தையும் நான் அறியாமவில்லை. ஆனல் உங்களுக்கு, முன்பே மணம் புரிந்து வைத்த துணைவி ஒருத்தி உண்டென்பதை இதுகாறும் மறைத்து வைத்து ஏமாற்றியது ஆச்சரியமே ! உங்களைக் கைபிடித்த மனேயாள் பொழியும் துயரக் கண்ணிரின் அடித் தனத்தில் என் மன மாளிகையை இன்ப மயமானதாக நிர்மாணிக்க என் பெண் மனம் ஒரு போதும் இடம் தராது”. மிஸ் மாயா இப்படிப் பேசிளுள். அவளே தா ன் கண்டித்துப் பேசிளுள், பெண்மை முன்னின்று பேசியது. அந்தப் பேச்சிலே உக்கிரம் உதயமானது. பிறகு அன்று வந்த கடிதத்தையும் அவரிடம் நீட்டிள்ை.

  • டைரக்டர் ஸார், தாங்கள் என்னை இத்துணை தூரம் முன்னேற்றிவித்தமைக்கு என் நன்றியும் வணக்கமும், ஆனல், புதுப்ப்ட் ஒப்பந்தத்தை விட்டு நானும் இப்பொழுதே விலகிக் கொள்கிறேன். மன்னியுங்கள் ' என்று கூறிய மாயா விர் ரென்று கிளம்பினள். ஜோதிநாத் அவனைப் பின்பற்றிஞர்.

மாயாவின் இத்தகைய-கனவில் கூட எதிர்பாராதமுடிவை நினைத்து மனம் ஒடித்த டைரக்டர், மாயா சென்ற வழியில் பதித்திருந்த விழியைத் திருப்பினர். கையில் பிரித்திருத்த கடிதத்தைத் திரும்பவும் பார்த்தார். அவர் கண்களில் கண்ணிர் பிரவகித்தது. மறுகணம் அப்படியே சிலையாய்ச் செயலிழந்து அமர்ந்து விட்டார் சந்திரம்ெளலி.