பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி கப்ப்ெ : பயங்கரமான நிசப்தம். மூன்ரும் வகுப்பு. வாத்தியார் வேலாயுதம் கைப் பிரம்பை மேசைமீது பல மாகத் தட்டிவிட்டு, ஊம் , சொல்லிடுங்க. என்ளுேட புது பார்க்கர் பேளுவை யார் எடுத்தது ? மரியாதையாய்ச் சொல் விடுங்க!” என்று எதிர்ப்புறம் விழிகளே நிமிர்த்திக் கோபா வேசத்தோடு கேட்டார். " நான் எடுக்கலிங்க ஸார் -இந்த ஒரே பதிலைத்தான் இருபத்தி நாலு சிறுவர்களும் ஐந்து சிறுமிகளும் ஒரே குர லெடுத்துச் சொன்னர்கள். அவர்கள் அத்தனை பேருடைய முகங்களும் பீதியாலும் கவலையாலும் உ ரு மா றிப் போயிருந்தன. வாத்தியார் தன்னுடைய டெரின் ஸ்லாக்கின் பையைப் பரிதாபமாகத் தடவிப் பார்த்தார்; மேஜையின் இழுப் பறையை இழுத்தார்; கண்களைத் துழாவினர். சோகம் மிஞ்சியது முகத்தில். வகுப்பை ஏறிட்டு நோக்கினர். முகத் திலே எள் மட்டுமல்ல ; கொள்ளும் வெடித்தது. இளரத்தழ்