பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


பிரித்துக் கொட்டினன். கந்தல் படிந்த நிக்கர் பையைப் பிதுக்கிக் காட்டினன். ' உங்க பேணுவை எங்க வாத்தியா ரான உங்க பேணுவை நான் எடுப்பேனுங்களா, ஸார் ? அன் னிக்கு ஒரு வாட்டி நான் சோமுவோட சாக்லெட்டைத் தின் னதைக் கண்டு நீங்க எனக்குப் பிரப்பம் பழம் கொடுத்தது எப்பவும் இனி நினைப்பிருக்குங்க ஸார் !...” என்று பரிதாப மாகச் சொன்னன். வாத்தியாரின் கண்கள் ஏன் அப்படிக் கசிகின்றன : மணியை கை ஜாடையால் அவனுக்குரிய இடத்துக்கு அனுப்பி விட்டார். நீள் மூச்சு பறிந்தது நீளமாக நீள் மூச் சென்ருல் பின்னே சும்மாவா? அவர் மீண்டும் வகுப்பை நோக்கினர். " என்ன அநியாயம் இது?...மேஜை மேலே வச்ச பேணு எப்படி மாயமாக மறைய முடியும்? குறளியா வந்து திருடிக்கிட்டுப் போயிடுச்சு? அதெல்லாம் இல்லை. இந்த க்ளாசிலே உள்ள வங்களிலே யாரோதான் திருடி வச்சிருக்கவேனும், பேனவை எடுத்தவங்க மரியாதையாய்க் கொண்டு வந்து என்கிட்டே கொடுத்திடுங்க. எடுத்தவங்களே. அடிக்கவேமாட்டேன். இந்தப் பிஞ்சுப் பிராயத்திலேயே நெஞ்சிலே நஞ்சு சேருறதை என்னலே அனுமதிக்கவே ழுடியாது ஆமாம் !" என்று ஒரு பாட்டம் பேசி முடித்தார். மூச்சு விட வேண்டாமோ ? - மீண்டும், " நான் எடுக்கலே ! நான் எடுக்கலேங்க லார் : என்ற பலவேறு குரல்கள் பலவேறு பகுதிகளினின்றும் எதிரொலித்தன. . வேலாயுதம் சிந்தனே வசப்பட்டார் ; க ண க் கு ப் புத்தகத்தைப் புரட்டினர். அப்போது: - ஸார், டயம் ஆகுது. நீங்க இப்போ கணக்குப்,பாடம் சொல்லிக் கொடுங்க. ஸார் 1’ என்ருன் பாபு. வகுப்பில் முதல் மார்க் வாங்கும் பொடியன் ஆயிற்றே அவன் ! வாததியார் வேலாயுதம் அச் சிறுவன அன்பு சுரக்க நோக்கினர். " என் கடமையை மறந்திடுவே ைபாபு. இதோ 10 -